டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறு உத்தரவு வரும்வரை.. பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த உத்தரவு வரும் வரை பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் லாக்டவுன் காலகட்டத்தில், மார்ச் மாதம், அதிக எண்ணிக்கையிலான பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

"லாக்டவுன் காலத்தில் அசாதாரண எண்ணிக்கையிலான பிஎஸ்-4 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன" என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 13ம் தேதிக்கு, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடங்க மாட்டேங்குறாங்களே.. மீஞ்சூரில் பெரியார் சிலை சேதம்.. கோவை தொடங்கி.. தொடரும் சர்ச்சை!அடங்க மாட்டேங்குறாங்களே.. மீஞ்சூரில் பெரியார் சிலை சேதம்.. கோவை தொடங்கி.. தொடரும் சர்ச்சை!

ஆட்டோமொபைல் டீலர்கள்

ஆட்டோமொபைல் டீலர்கள்

இம்மாத துவக்கத்தில், இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, ஆட்டோமொபைல் டீலர் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை, முன்வைக்கப்பட்டது. அதில், விற்பனையாகாத, பிஎஸ்-4 வாகனங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்ப தேவையுள்ளது. அந்த வாகனங்களை அவர்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வசதியாக இருக்கும்

பிற நாடுகள்

பிற நாடுகள்

சில நாடுகளில் பிஎஸ்-4 வாகனங்களின் விற்பனை இன்னும் நடக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சிறப்பு அனுமதி

சிறப்பு அனுமதி

முன்னதாக மார்ச் 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 6 நாட்கள் அமலான லாக்டவுனால் ஏற்பட்ட விற்பனை சரிவை பூர்த்தி செய்ய பிஎஸ்-4 வாகனங்களில், 10 சதவீதத்தை விற்பனை செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருப்பினும் அதிக மாசுபாடு உள்ள டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெளிவாக கூறியிருந்தது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. மார்ச், 29 முதல் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகன விற்பனை அதிகரித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், நீங்கள் சிக்கலில் மாட்டியுள்ளீர்கள். சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

தளர்வுகள்

தளர்வுகள்

அதிக மாசு வெளிப்படுத்துவதால், பாரத் -4 வாகனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாகவே, சில தளர்வுகள் தரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court Friday directed that no BS-IV vehicles will be registered with the authorities till it decides the issue of sale of such vehicles during the lockdown period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X