டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நேர விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.. முகுல் ரோத்தகி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்த நேரத்தில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சியமைத்ததுக்கு எதிராக காங்கிரஸ, என்சிபி, சிவசேனா ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.

மகாராஷ்டிரா ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்க முடிவு செய்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்.சி.பி-சிவசேனா ஆகிய கட்சிகள் தாக்கல் செய்த மனுவின் மீது உத்தரவை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கிறிஸ்துவ திருமணங்கள் பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவுகிறிஸ்துவ திருமணங்கள் பதிவு.. விளக்கமளிக்க தமிழக பதிவு துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

வழக்கு ஒத்திவைப்பு

வழக்கு ஒத்திவைப்பு

முன்னதாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற. நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்த பாஜகவுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நாள் குறித்த உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையானது

உண்மையானது

இந்த வழக்கில் மகாராஷ்டிராவில் ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், "வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணியில் இருந்த நட்பு கட்சி ஆதரவை தரவில்லை. 170 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நாங்கள்(பாஜக) ஆளுநரிடம் சென்றோம். இப்போது நடப்பது சரத்பவாரின் குடும்ப சண்டை. ஆதரவு கடிதம் பொய்யானது என்று யாரும் கூறவில்லை. சரத்பவார்ர் மற்றும் அவரது கட்சிகள் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆளுநர் கோஷ்யரி விவேகத்துடன் செயல்பட்டார், அவர் நியாயமான முறையில் செயல்பட்டார் எனவே இந்த நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்றார்.அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி என்னவென்றால், முதல்வர் சபையில் பெரும்பான்மையைப் பெறுகிறாரா இல்லையா என்பதுதான். இதை சபையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியது.

தீர்மானிக்க முடியாது

தீர்மானிக்க முடியாது

இதைத்தொடர்ந்து பேசிய முகுர்ரோத்தகி, ஆளுநரின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநரின் முடிவு சட்டவிரோதமானது அல்ல. நம்பிக்கை வாகெடுப்பு எப்போது நடத்த வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றார்.

துஷர் மேத்தா

துஷர் மேத்தா

அப்போது குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் துஷர் மேத்தா , ஒரு கட்சி இந்த நீதிமன்றத்திற்கு வந்து 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்றால், எனது எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஓடலாம் என்று சொல்ல முடியுமா? என்று ரோத்தகிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினார்.

கண்காணிக்க முடியுமா

கண்காணிக்க முடியுமா

தொடர்ந்து முகுல் ரோத்தகி தொடர்ந்து பேசுகையில், இதையெல்லாம் ஆளுநர் தீர்மானிக்க வேண்டும். ஒரு சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார், பின்னர் முதல் நிகழ்ச்சி நிரலாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவார். சபையின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க முடியுமா? இது அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளது.

14 மாதங்கள் அல்ல

14 மாதங்கள் அல்ல

இந்த நீதிமன்றம் சபையின் சபாநாயகராக செயல்பட்டு எல்லாவற்றையும் முடிவு செய்ய வேண்டும் என்பதே இப்போது வேண்டுகோள். சபாநாயகர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை, விரைவில் சட்டசபை கூட்டப்பட உள்ளது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் சொல்லி எல்லாவற்றையும் முன்கூட்டியே நிறுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆளுநர் 14 நாட்கள் (நவம்பர் 23 முதல்) வழங்கியுள்ளார், 14 மாதங்கள் அல்ல. எனவே இந்த நீதிமன்றம் இப்போது ஆளுநரின் கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டுமா?

பலம் இருந்தால்

பலம் இருந்தால்

தற்காலிக சபாநாயகர் மூலம் முழுநேர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே அவர்களுக்கு போதிய பலம் இருந்தால் அவர்கள் சபாநாயகர் தானே அங்கு தேர்வு செய்யப்படுவார்" என்றார்

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

தற்காலிக சபாநாயகர் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரோத்தகி , முழு நேர சபாநாயகர் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் உச்ச நீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எந்த உத்தரவையும் நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.இதையடுத்து உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக ஒத்திவைத்துள்ளது.

English summary
'Supreme court can't decide on time of trust vote': says , senior lawyer Mukul Rohatgi , he Appearing for Maharashtra government in the Supreme Court for case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X