டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்

Google Oneindia Tamil News

Recommended Video

    CJI Ranjan Gogoi recommends Justice S.A. Bobde

    டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். பொதுவாக தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்து கடிதம் அனுப்புவது மரபு.

    Supreme Court Chief Justice Recommends Justice Bobde As Successor

    அதன் அடிப்படையில் தமக்கு அடுத்ததாக இருக்கும் எஸ்.ஏ. பாப்டேவை புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ரஞ்சன் கோகாய். புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஏ. பாப்டே, மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.

    பாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணிபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி

    நாக்பூரில் பிறந்தவர்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பிறந்தவர் பாப்டே. நாக்பூர் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார் அவர். 2000-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியில் இணைந்தார்.

    2012-ம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாப்டே, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டார்.

    English summary
    According to the sources, Supreme Court Chief Justice Ranjan Gogoi has written to Centre recommending Justice S.A. Bobde as his successor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X