டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெடுபிடி.. பேஸ்புக் பயன்படுத்த ஆதார் அவசியமா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு பேஸ்புக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Supreme Court defers for Tuesday a plea filed by Facebook

பேஸ்புக் பயனாளர்களின் அடையாளத்தை அங்கீகரிப்பதற்காக ஆதார் தரவுகளை பேஸ்புக்கின் சுயவிவரங்களுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஒன்றாக்கி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையாக உள்ளது.

நாளை இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால், பேஸ்புக் பயனாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
Supreme Court defers for Tuesday a plea filed by Facebook for transfer to SC the petitions pending in different High Courts across the country, demanding to interlink Aadhaar database with social media profiles for authentication of identity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X