டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல்காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான மனுவில் இங்கிலாந்து நாட்டில் நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

Supreme court dismissed dual citizenship case against Rahul gandhi

ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே கோர்ட்டு தலையிட்டு ராகுல் காந்தியின் அமேதி மற்றும் வயநாட்டில் தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு! தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு!

இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போத மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் வழக்க தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் அமேதி மற்றும் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிட்டிருப்பதில் இருந்த பிரச்சனை நீங்கியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தொடுத்த இதே போன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Supreme court has dismissed dual citizenship case against Rahul gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X