டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதியான சிங்கமா? ஆக்ரோஷமான சிங்கமா? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்! அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட நான்முக சிங்க தேசிய சின்னம் சட்ட விதிகளுக்கு எதிரானது இல்லை என கூறிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக இரு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் தேசிய சின்னமான ஆக்ரோஷமான கர்ஜிக்கும் நான்முகச் சிங்கம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.

6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆர்எஸ்எஸ் பேரணி...தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்புஆர்எஸ்எஸ் பேரணி...தமிழகத்தில் நவ.6 ல் நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி..மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு

நான்முக சிங்கங்கள்

நான்முக சிங்கங்கள்

வழக்கமான இந்தியாவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்றிருக்கும் சிங்கங்கள் அமைதியான முகத்துடன் இருக்கும் நிலையில், பாஜக நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பாஜக அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். நாட்டின் சின்னத்தையே மாற்றும் பாஜக அரசு நாளை எதை வேண்டுமானாலும் மாற்றும் எனவும், இது சர்வாதிகார போக்கு என விமர்சனம் எழுந்தது.

 கிளம்பிய எதிர்ப்பு

கிளம்பிய எதிர்ப்பு

நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது உண்மையான சிங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியினுடைய சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன. அதனை உடனே மாற்ற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது உண்மையான சிங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியினுடைய சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன. அதனை உடனே மாற்ற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது உண்மையான சிங்கள் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியினுடைய சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமலும் இருக்கின்றன. அதனை உடனே மாற்ற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

விதிமீறல்?

விதிமீறல்?

இந்நிலையில் இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய தேசிய சின்னத்தின் வடிவமைப்பு தேசிய சட்ட விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும், சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ள நான்முக சிங்க சிலைக்கு முற்றிலும் எதிராக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. நாட்டின் சின்னத்தையே மாற்றி அமைத்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ள நான்முக சிங்கம் வழக்கத்திற்கு முற்றிலும் எதிராக இருப்பதாக வழக்கறிஞர்கள் அல்தானிஸ் ரெய்ன், ரமேஷ்குமர் மிஸ்ரா ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

 வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்ஷா. தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தேசிய அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களது குற்றச்சாட்டினை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட நான்முக சிங்க தேசிய சின்னம் சட்ட விதிகளுக்கு எதிரானது இல்லை என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

English summary
The Supreme Court has dismissed a public interest petition filed by two lawyers in this regard, stating that the four-faced lion national symbol inaugurated in the New Parliament Building in Delhi is not against the provisions of law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X