டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிக்கிற வெயிலுக்கு பேசாம காலை 5.30-க்கு வாக்குப்பதிவை துவக்குங்க.. உச்சநீதிமன்றம் யோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயிலின் கொடுமை பற்றி உச்சநீதிமன்றமும் யோசித்துள்ளது. அதனால் தான் அடுத்த கட்டமாக மக்களவை தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில், காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை துவக்கலாமே என்ற யோசனையை தெரிவித்துள்ளது.

வெயில் வெளுத்து வாங்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Supreme Court gave idea to early start polling process upcoming Lok sabha elections

7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலில், 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. இந்நிலையில் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களுக்குள்ளாவது இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்க கோரி மூத்த வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா ஆஜரானாா்.

வந்து விட்டது 5ம் கட்ட தேர்தல்.. மொத்த வேட்பாளர்களில் 12% பெண்கள்! வந்து விட்டது 5ம் கட்ட தேர்தல்.. மொத்த வேட்பாளர்களில் 12% பெண்கள்!

விசாரணையின் போது ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு நேரத்தை மாற்றலாமா என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என்றும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது. கொளுத்தும் வெயிலில் பிற்பகலுக்கு மேல் ஓட்டு போட வருவதற்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

இதில் ரம்ஜான் மாதமும் துவங்யுள்ளதால் காலை 7 மணிக்கு பதில், 5.30 மணிக்கே வாக்குப்பதிவை துவங்கினால் மக்கள் முன்கூட்டியே வந்து ஆர்வமாக வாக்களித்து செல்ல ஏதுவாக இருக்குமே என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த யோசனையை தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இனி வரும் 3 கட்ட மக்களவை தேர்தல்களின் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Supreme Court directed the Election Commission to pass appropriate orders in a plea seeking an early start to polling in upcoming phases of the Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X