டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறைய திறம்பட சமாளிக்கும் மும்பை மாநகராட்சியிடம் இருந்து டெல்லி அரசும், மத்திய அரசும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

அரசின் செயலின்மையை மறைக்க முஸ்லீம்கள் மீது பழி.. பெங்களூர் பாஜக எம்எபி தேஜஸ்விக்கு காங்கிரஸ் கண்டனம்அரசின் செயலின்மையை மறைக்க முஸ்லீம்கள் மீது பழி.. பெங்களூர் பாஜக எம்எபி தேஜஸ்விக்கு காங்கிரஸ் கண்டனம்

700 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

700 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

இதனை தொடர்ந்து டெல்லியில் நாள் ஒன்றுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே டெல்லியில் ஆக்சிஜன் நெருக்கடி தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ''டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை.

அவமதிப்பு நடவடிக்கை

அவமதிப்பு நடவடிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மும்பைக்கு பாராட்டு

மும்பைக்கு பாராட்டு

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- மும்பை மாநகராட்சியிடம் இருந்து தினந்தோறும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் மும்பை மாநகராட்சி மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறது. அவர்கள் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் டெல்லியை(மத்திய அரசு) இடையூறு செய்யமால் எப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள்?

மும்பைக்கு பாராட்டு

மும்பைக்கு பாராட்டு

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- மும்பை மாநகராட்சியிடம் இருந்து தினந்தோறும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் மும்பை மாநகராட்சி மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறது. அவர்கள் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் டெல்லியை(மத்திய அரசு) இடையூறு செய்யமால் எப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள்?

கற்றுக்கொள்ளுங்கள்

கற்றுக்கொள்ளுங்கள்

மாகாராஷ்டிரா ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிலையில் டெல்லி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறைய திறம்பட சமாளிக்கும் மும்பை மாநகராட்சியிடம் இருந்து டெல்லி அரசும், மத்திய அரசும் கற்றுக்கொள்ள வேண்டும். டெல்லிக்கு முழு ஆக்சிஜன் கோட்டா அளவான 700 மெட்ரிக் டன்னை மத்திய அரசு வழங்கிட வேண்டும். இதற்காக திட்டத்தை மத்திய அரசு நாளை காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court has said that the Delhi government and the central government should learn from the Mumbai corporation to deal effectively with oxygen deficiency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X