டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் விவகாரத்தில், மோடி மீது விமர்சனம்.. ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தவறாக, மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சார்பில், அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம், தொடர்பான வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக, விசாரணை நடந்து வருகின்றது.

Supreme court issues contempt notice to Rahul Gandhi over Rafale verdict

இந்த நிலையில், பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி. இதுதொடர்பாக பாஜக தலைவர்களில் ஒருவரான மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ராகுல் காந்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்! ஓட்டுப் போட்டாச்சு.. விவிபாட்டில் என்ன தெரியுது.. ஆ.. பாம்பு வருதே.. அலறிய வாக்காளர்கள்.. கேரளாவில்!

இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, அமர்வு முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி, ராகுல் காந்திக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

ஆனால், வழக்கில் முகாந்திரம் இருப்பதாக, கூறிய உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court on Tuesday issued contempt notice to Congress President Rahul Gandhi for his remarks on the Rafale judgment, which the apex court had said were "incorrectly attributed" to it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X