டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரெடிட் கார்டில் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் தந்த உச்ச நீதிமன்றம்! அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு அறிவித்த 2 கோடி வரையிலான கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி சலுகை, கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் கடந்த மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் ஆறு மாத காலம் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பேருந்துகள் ஓடவில்லை. வாகனங்கள் இயங்கவில்லை. மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடங்கி ஆறு மாதம் வரை வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தது.

பரிசு தொகை

பரிசு தொகை

எனினும் 6 மாதங்களுக்கு கட்டாயம் வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிகள் வட்டிக்கு வட்டியையும் வசூலிக்கத் தொடங்கின. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 6 மாதங்களுக்கு விதிக்கப்படும் வட்டிக்கு வட்டியை ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.. இதன் அடிப்படையில், தற்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகையை பயன்படுத்தாமல் தவணையை முறையாக செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள் கேள்வி

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் இதை விசாரித்தனர். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தத்தா, "கொரோனா காலத்தில் எங்கள் பிரச்னைக்கு உதவி செய்த மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்,'' என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அப்படி என்றால் வழக்கை முடித்து கொள்கிறீர்களா? ஆனால், மின் உற்பத்தியாளர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள் நிவாரணம் கோரியுள்ளனரே?' என கூறினர் . மத்திய அரசின் சார்பில் வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘இப்போது வழங்கப்பட்டுள்ள வட்டிக்கு வட்டி சலுகையில், பெரிய, சிறிய கடன் என்ற கணக்கு பாகுபாடு கிடையாது. ரூ.2 கோடிக்கு கடன்பட்டவர்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். இது, கொரோனா பாதிப்பில் இருந்தவர்களின் மன அழுத்தத்தை குறைத்துள்ளது,'' என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்ஆர்.ஷா, ‘‘காமாத் கமிட்டி என்பது பெரிய கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் தானா?'' என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, மின் உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘எங்கள் தரப்பு கோரிக்கையையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மின் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்து ரூ.1.2லட்சம் கோடி கடனில் உள்ளது. இப்பிரச்னையை ரிசர்வ் வங்கி சரி செய்யலாம். அதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது,'' என்று தெரிவித்தார்.

நுகர்வோர் கடன் அல்ல

நுகர்வோர் கடன் அல்ல

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மின் உற்பத்தியாளர் கேட்கும் சலுகைகள் தொடர்பாக, தங்களின் வாதங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எழுத்துப்பூர்வமாக நாளைக்குள் (இன்று) சமர்பிக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ள ரூ.2 கோடி கடன் வரையிலான வட்டிக்கு வட்டி சலுகை கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது. இந்த கார்டு பயன்படுத்துபவர்களை நுகர்வோர் கடன் வகைகளில் சேர்க்க முடியாது,'' என்றனர். விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

English summary
supreme court said that Credit card users shouldn't be given the benefit of compound interest waiver. SC said that credit card users aren't borrowers, since they don't have a loan, they're purchasing. The top court disposed off petitions in which the petitioners are satisfied with compound interest waiver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X