டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தின் சூரத்தில் 3வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரமே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.

குஜராத்தின் சூரத் நகரில் பீகாரைச் சேர்ந்த கொடூரன் அணில் சுரேந்தர் யாதவ் (வயது 60) என்பவன் பேத்தி வயது உடைய 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Supreme Court Put On Hold Hanging Of Man Who Raped, Killed 3-Year-Old

அணில் சுரேந்தர் யாதவ்வை அம்மாநில போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் குற்றவாளி அணில் சுரேந்தர் யாதவ்வை சாகும் வரை தூக்கிலட வேண்டும் என்று மரண தண்டனை விதித்தது. இவரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27 அன்று உறுதி செய்தது.

இந்நிலையில் அணில் சுரேந்தர் யாதவ்க்கு வரும் பிப்ரவரி 29ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வந்தது. தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரமே உள்ள நிலையில், அனில் சுரேந்திர யாதவ் உச்சநீதிமன்றத்தில் தூக்கிலிடப்படுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபராஜிதா சிங் வாதிடுகையில், அனைத்து சட்ட தீர்வுகளும் தீர்ந்துபோகும் முன் டெத் வாரணட் ( மரண உத்தரவு) பிறப்பிக்க முடியாது என்று வாதிட்டார்.

யாதவ் தனது மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 60 நாட்கள் உள்ளன, அதற்கு முன் டெத் வாரண்ட் பிறப்பிக்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

வாதங்களை கேட்டபின், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, "அனைத்து சட்ட தீர்வுகளும் தீர்ந்துபோகும் முன் டத் வாரண்ட் பிறப்பிக்க முடியாது என்று கூறியதுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, ஒரு நீதிபதி எவ்வாறு அத்தகைய உத்தரவுகளை அனுப்ப முடியும்? இதுபோன்ற நீதித்துறை செயல்முறைகளை ஏற்க முடியாது என்றார். அத்துடன் அத்துடன் பிப்ரவரி 29ம் தேதி தண்டனைய நிறைவேற்றக்கூடாது என்றும் தடை விதித்தார்.

English summary
Supreme Court Put On Hold Hanging Of Man Who Raped, Killed 3-Year-Old in surat. . becasue a death warrant can't be issued before all legal remedies are exhausted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X