டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் மீதான தமிழக அரசின் சீராய்வு மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் மீதான தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாயம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

Supreme court rejects the Tamlnadu governments review petition in Sterlite

இதையடுத்து 100-ஆவது நாள் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும் பசுமை தீர்ப்பாய விசாரணை தடை கோரியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை நிராகரித்ததோடு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து விட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
SC quashes Review petition filed by Tamilnadu Government asking ban on National Green Tribunal's order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X