டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா உயிரிழப்புகள்..இறப்பு சான்றிதழில் என்ன காரணம் குறிப்பிடப் போகிறீர்கள்? உச்ச நீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் அளிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனாவால் ஒருவர் வீட்டில் உயிரிழந்திருந்தாலும் இறப்பிற்கான காரணத்தில் கோவிட் 19 எனக் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் உயிரிழப்புகள் அதிகபட்சமாக நான்காயிரத்தைக் கூட கடந்தது.

சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழ் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இறப்பு சான்றிதழ்

இறப்பு சான்றிதழ்

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர் ஷா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா நோயாளிகளின் இறப்புச் சான்றிதழ்கள் மரணத்திற்கான காரணங்களாக வேறு சில காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே இறப்பு சான்றிதழ்களில் வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தால், அது குறித்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது.

எளிமைப்படுத்த வேண்டும்

எளிமைப்படுத்த வேண்டும்

கொரோனா இறப்புகளுக்குச் சான்றிதழ் வழங்குவதற்கான முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும். நோயாளி மருத்துவமனையில் உயிரிழந்திருந்தாலும் வெளியில் உயிரிழந்திருந்தாலும் அவருக்கு கொரோனா பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தால், அவருக்கு இறப்பு சான்றிதழில் காரணத்தை கோவிட் 19 என குறிப்பிட முடியுமா?" என்று கேட்டனர்.

அரசு விளக்கம்

அரசு விளக்கம்

இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொரோனா சார்ந்த மரணங்கள் அனைத்திற்கும் இறப்பு சான்றிதழ்களில் COVID-19 என்றே குறிப்பிட வேண்டும். இது தான் அரசின் நிலைப்பாடு. அவ்வாறு அளிக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட மருத்துவர் உட்பட அனைவரது மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய அரசு

மத்திய அரசு

முன்னதாக மத்திய அரசு இது குறித்துத் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கொரோனா சார்ந்த அனைத்து உயிரிழப்புகளும் காரணமாக கோவிட் 19 என்றே குறிப்பிட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருந்து. கொரோனா நோயாளி ஒருவர மற்ற காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்பது மிக உறுதியாகத் தெரியவிட்டால், இறப்பிற்கான காரணத்தை கோவிட் 19 என்று குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

English summary
The Supreme Court asked the Union government what it plans to do in cases of COVID-19 patients whose death certificates cited some other reason for the cause of death. It also says govt must simplify COVID-19 death certification process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X