டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதிக்கு எதிராக சதி? நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற செயல்பாடுகளை 'பிக்சிங்' செய்ய முடியாது என்பதை நிரூபிக்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் பெரும் சதி உள்ளது என வழக்கறிஞர் உற்சவ் பயின்ஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால். இந்த வழக்கை அருண் மிஸ்ரா தலைமையில், ரோஹின்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

Supreme Court slams fixers over CJI issue

இன்று காலை இந்த வழக்கு விசாரணையின்போது, கருத்து தெரிவித்த நீதிபதி அருண் மிஸ்ரா, உச்சநீதிமன்ற வழக்குகளில் பணம் படைத்தோரோ அல்லது அரசியல் பலம் உள்ளவர்களோ தலையிட முடியாது. பிக்சிங் செய்ய முடியாது. மக்களுக்கு இதுதொடர்பாக தெளிவான சேதி போக வேண்டும். நெருப்போடு விளையாட முடியாது, விளையாடினால் கை விரல்கள் பொசுங்கி விடும், என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. எனவே, சிறப்பு குழுவை அமைத்து, இந்த சதியின் பின்னணி பற்றி ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் உ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்... மர்ம கடிதத்தால் பரபரப்பு தேர்தல் நேரத்தில் உ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்... மர்ம கடிதத்தால் பரபரப்பு

இந்த வழக்கில் இன்று பகல் 2 மணிக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக, உற்சவம் பயின்ஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடர கோரி தன்னை சிலர் அணுகியதாக கூறியிருந்தார். மேலும், சில சதிகள் தொடர்பாக ரகசியமாக சீலிட்ட உரையில் அவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.

English summary
The Supreme Court bench headed by Justices Arun Misra, said that they will pass orders at 2 PM today on CJI case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X