டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதனிடையே, அடுத்தடுத்து, 16 எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 13 பேர் காங்கிரசையும், 3 பேர் மஜத கட்சியையும் சேர்ந்தவர்கள். ஆனால் இதுவரை இவர்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதையடுத்து முதலில் 10 எம்எல்ஏக்களும், பின்னர் 5 எம்எல்ஏக்களும், சபாநாயகர் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏக்கள் தரப்பு வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பது சபாநாயகர் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதேநேரம், ராஜினாமா கொடுத்த எம்எல்ஏக்கள் சபாநாயகர் முடிவெடுக்கும் வரை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால், கர்நாடக அரசு சிக்கலில் சிக்கியுள்ளது.

இதுதொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு, இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Newest First Oldest First
6:16 PM, 17 Jul

அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் சித்தராமையா கோரிக்கை அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளது பற்றி ஆதாரங்கள் சமர்ப்பிப்பு
12:00 PM, 17 Jul

உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவிக்க மறுப்பு. செய்தியாளர்கள் கேள்விகளுக்கு குமாரசாமியிடம் பதில் இல்லை.
11:17 AM, 17 Jul

உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ஜனநாயகத்திற்கு வெற்றி- எடியூரப்பா அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் விரைவில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார் பெங்களூரில் பாஜக தலைவர் எடியூரப்பா பேட்டி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்- முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
10:45 AM, 17 Jul

15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட். சபாநாயகருக்கு முடிவெடுக்க கால வரையறை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட். நியாயமான காலவரையறைக்குள் ராஜினாமா விவகாரம் பற்றி சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் .
10:43 AM, 17 Jul

சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் வருகை தர வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது- உச்சநீதிமன்றம். சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை சட்டசபை செல்ல கட்டாயப்படுத்த முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவால் விப் உத்தரவில் இருந்து தப்பினர் அதிருப்தி எம்எல்ஏக்கள்.
10:37 AM, 17 Jul

கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வாசிக்க துவங்கினர்
10:32 AM, 17 Jul

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. வழக்கில் தொடர்புள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வருகை
10:14 AM, 17 Jul

பெங்களூர் கவிகங்காதேஸ்வரர் கோவிலில் ருத்ரஹோமம் செய்த எடியூரப்பா. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ஹோமம்
10:02 AM, 17 Jul

அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு. கர்நாடக முதல்வர் பெங்களூர் சங்கரமடத்தில் சாரதாம்பாவிற்கு சிறப்பு வழிபாடு

Supreme Court will deliver its verdict on Karnatala rebel MLAs
English summary
Supreme Court is set to deliver its verdict on pleas of 15 rebel Congress-JD (S) MLAs seeking a direction for Karnataka Assembly Speaker KR Ramesh Kumar to accept their resignations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X