டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. கட்சிகளுக்கு செக்

மத்திய அரசின் தேர்தல் நிதி பத்திர திட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் நிதி பத்திர விவரத்தை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தேர்தல் நிதி பத்திர திட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்ற வருடம் வரை அரசியல் கட்சிகள் நேரடியாக மட்டும் நிதிகளை பெற்றுவந்தது. அதாவது ஒரு நபர் அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்க வேண்டும் என்றால் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம், நேரடியாக பணம் கொடுக்கலாம், இல்லையென்றால் காசோலை கொடுக்கலாம்.

ஆனால் மத்திய பாஜக அரசு இந்த பல்லாண்டு கால நடைமுறையை மாற்ற நினைத்தது. அதன்படி தேர்தல் நிதிக்கு எதிராக தேர்தல் நிதி பத்திரம் (Electoral Bonds) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது கொஞ்சம் சிக்கலானது.

"நீங்கள் உட்காருங்க" என ஸ்டாலின் சொல்ல.. "இல்லை பரவாயில்லை" என வைத்திலிங்கம் மறுக்க..!

எப்படி

எப்படி

இதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

எப்படி

எப்படி

இதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இதன் மூலம் எந்த கட்சிக்கு யார் பணம் அளிக்கிறார்கள் என்ற விவரம் தெரியாது. அந்த கட்சிக்கே தங்களுக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பது தெரியாது. நிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாக வைத்திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது.

என்ஜிஓ வழக்கு

என்ஜிஓ வழக்கு

இதற்கு எதிராக என்ஜிஓ ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் நேற்று விசாரணை முடிந்தது. இதில் அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், ஒரு கட்சிக்கு எங்கிருந்து பணம் வரும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு என்று கூறினார்.

கருப்பு பணம்

கருப்பு பணம்

அதேபோல் இது கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட திட்டம் என்று கூறினார். ஆனால் நீதிபதிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் கருப்பு பணம் இதனால் அதிகமாக மட்டுமே ஆகும், குறையாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

இன்று தீர்ப்பு

இன்று தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். அதன்படி தேர்தல் நிதி பத்திர விவரத்தை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 30ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்தும்

அனைத்தும்

தேர்தல் நிதிகள் தொடர்பான அனைத்து விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் இதனால் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வளவு பணம் பெறப்பட்டது. எந்த கால இடைவெளியில் பெறப்பட்டது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

English summary
Supreme Court will give its verdict today on Electoral Bonds case filed by on NGO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X