டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்சர், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, 4 எம்.பிக்கள் மற்று 6 எம்.எல்.ஏக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்தை எட்டியுள்ளது.

 கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம் கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

முதல் எம்.எல்.ஏ. அன்பழகன்

முதல் எம்.எல்.ஏ. அன்பழகன்

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. தமிழகத்தைச் சேர்ந்த திமுகவின் ஜெ. அன்பழகன். லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உதவிகள் வழங்கிய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு காலமானார்.

இதுவரை யார் யார் மரணம்?

இதுவரை யார் யார் மரணம்?

உத்தரப்பிரதேசத்தில் 2 அமைச்சர்கள், மே.வங்கத்தில் 2 எம்.எல்.ஏக்கள், மத்திய பிரதேசத்தில் 1 எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலியாகினர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் டெல்லியில் ஆக.31-ந் தேதி காலமானார்.

கொரோனா காவு கொண்ட எம்.பிக்கள்

கொரோனா காவு கொண்ட எம்.பிக்கள்

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வசந்தகுமார், கர்நாடகாவின் ராஜ்யசபா எம்.பி அசோக் கஸ்தி, திருப்பதி தொகுதி எம்.பி. துர்கா பிரசாத் ஆகியோரும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி

முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி

இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 4 முறை லோக்சபா தேர்தலில் வென்றவர் சுரேஷ் அங்காடி. கர்நாடகாவின் பெல்காமில் பாஜகவின் முகமாக அறியப்பட்டவர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Junior Railways Minister Suresh Angadi is the first Union minister to die of the Coronavirus infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X