நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையி0ல் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பூசி, கொரோனாவை கட்டுப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு தழுவிய லாக்டவுன், லாக்டவுனை அமல்படுத்தினால் தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.