டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்திய வம்சாவளியான சுரினாம் அதிபர் சந்த்ரிகாபெர்சாத் சந்தோஹி!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளாத நிலையில், சிறப்பு விருந்தினராக சுரினாம் அதிபர் சந்த்ரிகாபெர்சாத் சந்தோஹி கலந்து கொள்ள விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தோஹி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த வார தொடக்கத்தில், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் நடத்திய பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் சந்தோஹி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார், அவர் சிறப்புரையாற்றினார்.

 Surinames Indian-Origin President to be Republic Day Chief Guest

இந்தியா ஆரம்பத்தில் பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை குடியரசு தின விழாவின் முதன்மை விருந்தினராக அழைத்திருந்தது, ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இந்த சூழலில் தான் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரினாம் அதிபர் சந்த்ரிகாபெர்சாத் சந்தோஹி கலந்து கொள்ள விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுரினாம் தென் அமெரிக்காவில் உள்ள சிறிய நாடு ஆகும். டச்சு காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடு ஆகும். சுரினாம் நாட்டில் 587,000 மக்கள் வசிக்கிறார்கள். அங்கு உள்ள மக்கள் தொகையில் 27.4 சதவீதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தோனேசியா விமான விபத்து.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் இந்தோனேசியா விமான விபத்து.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இந்நிலையில் 2020 ஜூலையில் சுரினாம் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்தோகி பதவியேற்றார், அவரது கட்சியான முற்போக்கு சீர்திருத்தக் கட்சி தேர்தலில் 51 இடங்களில் 20 இடங்களை வென்றது. அவரது வெற்றி டேசி பௌட்டர்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. டச்சு மொழியில் வூரிட்ஸ்ட்ரெவண்டே ஹெர்வோர்மிங்ஸ்பார்டிஜ் அல்லது வி.எச்.பி என அதன் முதலெழுத்துக்களால் அறியப்பட்ட பிஆர்பி பெரும்பாலும் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, முதலில் ஐக்கிய இந்துஸ்தானி கட்சி என்று அழைக்கப்பட்டது.

English summary
Sources at the central government confirmed that Suriname's Indian-Origin President to be Republic Day Chief Guest After UK PM Boris Johnson Cancels Visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X