டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் அதிகாரியாக... சுஷில் சந்திரா பதிவியேற்பு... யார் இவர்?

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்றார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் எவ்வித பக்கச்சார்பும் இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ளவருக்குப் பொறுப்புகள் அதிகம்.

நாட்டிலேயே மிக முக்கிய பதவிகளில் ஒன்றாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி கருதப்படுகிறது. இந்தப் பதவியில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மிகக் கூர்மையாக நாடு முழுவதும் கவனிக்கப்படும்.

சுனில் அரோரா

சுனில் அரோரா

கடந்த இரண்டு ஆண்டுகள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் சுனில் அரோரா. இவரது பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பின்போதே, இது தொடர்பாக சுனில் அரோரா பேசியிருந்தார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக இதுதான் தனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அரோரா, தான் ஓய்வு பெற்றதும் புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியேற்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே, தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும், தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களாகவே பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்

சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் 24ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே, தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டது. இருப்பினும், தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் கடந்த சில தினங்களாகவே பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், சுஷில் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார்.

யார் இந்த சுஷில் சந்திரா

யார் இந்த சுஷில் சந்திரா

தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன், மத்திய நேரடி வரி வாரியத்தின் (சிபிடிடி) தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டிலுள்ள கறுப்புப் பண முதலைகளைக் கண்டறிய சுஷில் சந்திரா தலைமையின் கீழ், சிபிடிடி கடந்த 2017ஆம் ஆண்டில் "ஆபரேஷன் கிளீன் மனி" என்பதை அறிமுகப்படுத்தியது.

அடுத்தாண்டு வரை

அடுத்தாண்டு வரை

இவர் தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. கடந்த பிப்ரவரி 15, 2019இல் முதல் தேர்தல் ஆணையராகச் செயல்பட்டுவந்த இவர், தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார் என மைஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது

இக்கட்டான சூழ்நிலை

இக்கட்டான சூழ்நிலை

கடந்த சில காலமாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மம்தா தேர்தல் ஆணையம் பாஜகவுக்குச் சாதமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். காங்கிரஸின் ராகுல் காந்தி, வெறும் இரண்டே வார்த்தையில் தேர்தல் 'கமிஷன்' என்று நக்கலாக விமர்சித்திருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றுள்ள இவரது செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

English summary
Sushil Chandra Takes charge as New Chief Election Commissioner Today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X