டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தலித்? சுஷில்குமார் ஷிண்டே- மல்லிகார்ஜூனா கார்கேக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதால் சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜூனா கார்கே ஆகிய இருவரில் ஒருவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார். இதன் காரணமாக புதிய தலைவரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நேரு- இந்திரா காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கப்போவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக ராஜீவ் காந்தி இறந்த போது நரசிம்மராவும் அதன்பின்னர் சீதாராம் கேசரியும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தார்கள்.

தோல்விக்கு பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.. ராஜினாமா ஏன்? ராகுல் காந்தி பரபரப்பு விளக்கம் தோல்விக்கு பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.. ராஜினாமா ஏன்? ராகுல் காந்தி பரபரப்பு விளக்கம்

ராகுல் காந்தி பதவி விலகர்

ராகுல் காந்தி பதவி விலகர்

இப்போது காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருநது ராகுல் காந்தி விலகி உள்ளதால் புதிய தலைவராக நேரு காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

மல்லிகார்ஜுனா கார்கே

மல்லிகார்ஜுனா கார்கே

இப்போது வந்துள்ள தகவலின் படி காங்கிரஸ் மூத்த தலைவர்களான சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜுனா கார்கே ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்பு உள்ளதாம்.

தலித் முகம் ஷிண்டே

தலித் முகம் ஷிண்டே

இதில் 77 வயதாகும் சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் ஆவார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். இவர் காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. ஏனெனில் இவர் கடந்த 2002ம் ஆண்டு காங்கிரஸ் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தார். இவர் தலித் தலைவரும் கூட. ஷிண்டே சோனியா மற்றும் ராகுலின் நம்பிக்கைக்குரியவரும் கூட. எனவே இவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தலித் தலைவர் கார்கே

தலித் தலைவர் கார்கே

இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயதாகும் மல்லிகார்ஜூனா கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் உள்ளவர். மேலும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். இவரும் தலித் தலைவர்களில் ஒருவர் ஆவார் எனவே கார்கேவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் ஒருவாரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே புதிய தலைவர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படலாம்.

English summary
Sushil Kumar Shinde Or Mallikarjun Kharge most likely candidates to head the Congress. It will be the third time that someone outside the Nehru-Gandhi family will lead the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X