டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

சுஷ்மா சுவராஜின் இந்த தகவல் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில் சுஷ்மாவின் இந்த கூற்று பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sushmas comment on Balakot attack create ripples

கடந்த பெப்ருவரி மாதம் 14 ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சென்றுகொண்டிருந்த நமது சி ஆர் பி எஃப் படைவீரர்களின் வாகனத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நமது வீரர்கள் 40 க்கும் அதிகமானோர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக நமது விமானப்படை பெப்ருவரி மாதம் 26 ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலில் ஈடுபட்டது.

சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம் சென்னையில் பரபரப்பு... ஆற்காடு வீராசாமியின் பேரன் ஓட்டிய கார் மோதி எஸ்ஐ படுகாயம்

இந்த தாக்குதல் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தாக்குதலில் 300 க்கும் அதிகமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாஜக தலைவர்கள் பேசிவந்தனர். குறிப்பாக பாஜக தலைவர் அமித்ஷா தனக்கு கிடைத்த தகவலின்படி 250 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி வந்தார்.

இந்த தகவல் நம் நாட்டிலும் பாகிஸ்தானிலும் பரவியது. பாகிஸ்தான் இதை அப்போதே மறுத்திருந்தது. இதனால் நமது நாட்டில் எதிர்கட்சிகள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்களை வெளியிடுமாறு அரசை கேட்டுக் கொண்டன. இதற்கு பதிலளித்த பாஜக அரசு நமது படை வீரர்களை நாமே சந்தேகப் படலாமா என்று கேள்வி எழுப்பியதோடு தேசப் பாதுகாப்பு விசயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தது. இந்த பின்னணியில் தேர்தல் நெருங்கவே பிரதமர் மோடி இதையே தனது பிரதான பிரச்சார ஆயுதமாக்கினார். தங்கள் அரசால் மட்டுமே நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்று முழங்கினார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தல் இரு கட்டங்கள் நிறைவடைந்து விட்டன இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன. நிலமை இப்படி நீடிக்கும்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக பெண் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நாம் பாகிஸ்தானின் பால்கோட் மீது தாக்குதல் நடத்தியபோது சரவேதேச நாடுகளிடம் இது தற்காப்பு தாக்குதல் தான் என்பதை நாம் முன்கூட்டியே தெருவித்திருந்தோம்.

விமானப் படைக்கும் நாம் கொடுத்திருந்த அறிவுறுத்தலில் பாகிஸ்தான் வீரர்களுக்கோ, குடிமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் வர கூடாது என்று வலியுறுத்தி கூறியிருந்தோம். தீவிரவாத முகாம்களை மட்டுமே அழிக்க உத்தரவிட்டு இருந்தோம் என்று கூறியுள்ளார். அதுபோலவே நமது விமானப்படையும் பாகிஸ்தான் வீரர்களையோ குடிமக்களையோ தாக்கவில்லை இந்த தாக்குதலை சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன என்றும் சுஷ்மா கூறியுள்ளார்.

சுஷ்மாவின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் உடனடியாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் களநிலவரத்தின் அழுத்தம் காரணமாக சில உண்மைகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமன்றி 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எஃப் 16 ரக விமானம் வீழ்த்தப்பட்ட தகவலும் விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

சுஷ்மாவின் இன்றைய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தொடங்கியது முதல் இதுவரை நாட்டின் பாதுகாப்பு ஒரு வலுவான கரங்களில் உள்ளது என்று மோடி பால்கோட் தாக்குதல் குறித்தே பேசிவந்தார். அமித்ஷாவோ 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று தொடர்ந்து கூறிவந்தார்.

இப்படி இருக்கும்போது சுஷ்மா இப்படி கூறியது பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசலின் வெளிப்பாடாக இருக்க கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி மோடியால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்வானியின் தீவிர ஆதரவாளரான சுஷ்மா அத்வானிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுக்க இப்படி கூறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
EAM Sushma Swaraj's claim on Balakot attack has created roipples among BJP ranks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X