டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த நாளுக்காகத்தான் வாழ்க்கை முழுசும் காத்திருந்தேன்.. ட்விட்டரில் சுஷ்மா சொன்ன கடைசி வார்த்தை

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Swaraj Last Tweet :இதுக்காகத்தான் வாழ்க்கை முழுசும் காத்திருந்தேன்..சுஷ்மாவின் கடைசி வார்த்தை

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லியில் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    67 வயதான சுஷ்மா சுவராஜ், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற பெண் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

    நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக கடந்த மோடி ஆட்சி காலத்தின் போது பதவி வகித்ததும், இதற்கு ஒரு முக்கிய காரணம். அப்போது அவரது திறமையான செயல்பாடுகள் நாடு கடந்தும் பல்வேறு மக்களால் பாராட்டுகளைப் பெற்றது.

    கடைசி ட்வீட்

    கடைசி ட்வீட்

    திடீரென நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் சுஷ்மா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், கடுமையான மாரடைப்பு தங்கியிருந்ததால் மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் கடைசியாக வெளியிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. டுவிட்டர் மூலமாகவே பல்வேறு பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்த சுஷ்மா சுவராஜ், அவரது டுவிட்டர் தளத்தில் கடைசியாக செய்த பதிவு என்ன தெரியுமா?

    வாழ்நாள் தவம்

    "நன்றி பிரதமர் மோடி அவர்களே. மிகவும் நன்றி. எனது வாழ்க்கையில் இந்த நாளைத்தான் பார்ப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தேன்" என்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் அறிவித்தது. இதை பார்க்கத்தான் வாழ்நாள் முழுக்க காத்திருந்ததாக உணர்ச்சி பொங்க சுஷ்மா தெரிவித்திருந்தார்.

    மறுநாளே

    மறுநாளே

    ஆனால் வாழ்நாள் முழுக்க காத்திருந்த ஒரு விஷயத்தை பார்த்த மறு நாளே, அவர் தனது வாழ்நாளை முடித்துக் கொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது தான் சோகம்.

    English summary
    Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime, this is what sushma swaraj said in her last tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X