டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இந்திய தூதரகம் உதவும்.. டிவிட்டரில் ஹீரோவாக வலம் வந்த சுஷ்மா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Tweets | டிவிட்டரில் ஹீரோவாக வலம் வந்த சுஷ்மா!- வீடியோ

    டெல்லி: டிவிட்டரில் தான் ஒரு ஹீரோ என்பதை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பலமுறை நிரூபித்துள்ளார்.

    நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த சுஷ்மா சுவராஜ் பல முறை டிவிட்டர் மூலம் மக்களுக்கு உதவி இருக்கிறார். டிவிட்டரில் எல்லோரும் நெகட்டிவாக பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அதை நல்ல வகையிலும் பயன்படுத்த முடியும் என்பதையும் இவர் நிரூபித்துள்ளார்.

    மேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா மேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா

    உதவி

    உதாரணமாக மலேசியாவில் வாழும் இந்தியர் ஒருவர், தன்னுடைய நண்பரின் பாஸ்போர்ட் பிரச்சனை குறித்து சுஷ்மாவிடம் டிவிட்டரில் புகார் அளித்தார். ஆனால் அதில் நிறைய ஆங்கில இலக்கண பிழைகள் இருந்தது. இதையடுத்து வேறு ஒரு நபர் அதை கிண்டல் செய்து இருந்தார். ஆனால் சுஷ்மா உடனே, எனக்கு அவர் ஆங்கிலத்தை தவறாக எழுதியதில் பிரச்சனை இல்லை. நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன பின் அனைத்து விதமான ஆங்கிலத்தையும் பேச தொடங்கிவிட்டேன் என்று கூறினார்.

    அடுத்து என்ன

    அதேபோல் பாஜக கட்சியினர் எல்லோரும் தங்கள் பெயரை டிவிட்டரில் சவுக்கிதார் என்று மாற்றிக்கொண்டனர். அதேபோல் சுஷ்மாவும் தனது பெயரை சவுக்கிதார் என்று மாற்றிக்கொண்டார். இதற்கு ஒருவர், நீங்கள் மட்டும்தான் உங்கள் கட்சியில் அறிவுள்ள அமைச்சர் என்று நினைத்தேன். ஆனால் நீங்களே இப்படி செய்வீர்கள் என்று நினைக்கவில்லை என்று கூறினார். இதற்கு பதில் அளித்த சுஷ்மா, நானும் சவுக்கிதார்தான், நான் வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கான சவுக்கிதார், என்று கூறினார்.

    எங்கே இருந்தாலும்

    டிவிட்டரில் இவர் வரிசையாக பலருக்கு உதவி செய்வதை கிண்டல் செய்யும் விதமாக, ஒரு இளைஞர் ''மேடம் நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன், உதவுங்கள்'' என்று கேட்டார். இதற்கு கொஞ்சம் கூட கோபம் அடையாமல் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும், என்று குறிப்பிட்டார்.

    காஷ்மீர்

    காஷ்மீர்

    அதேபோல் இன்னொரு முறை டிவிட்டரில் ஒரு காஷ்மீர் இளைஞர் பாஸ்போர்ட் தொடர்பான உதவியை கேட்டார். ஆனால் அவரின் பயோவில், நான் இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீரை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டு இருந்திருந்தார். இதை பார்த்து கோபம் அடைந்த சுஷ்மா, இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் என்ற பகுதி உலகில் எங்குமே கிடையாது. அதை மாற்றுங்கள் முதலில், உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும் என்று கெத்தாக கூறினார் .

    English summary
    Sushma Swaraj proved many times that she is the king of Twitter among politicians .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X