டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஷ்மா ஸ்வராஜின் வியப்பளிக்கும் கடைசி ஆசை.. கடமை தவறாது நிறைவேற்றினார் மகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Tweets | டிவிட்டரில் ஹீரோவாக வலம் வந்த சுஷ்மா!- வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.

    முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய ஹரிஸ் சால்வேயிடம் பேசினார்.

    அப்போது சுஷ்மா கூறியது குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவர் கூறுகையில் நான் கடந்த மாதம் 6-ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு சுஷ்மாவிடம் பேசினேன். அப்போது அவர் எனக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் கட்டணத்தை தர வேண்டும் என தெரிவித்தார்.

    சால்வே

    சால்வே

    நானும் அதை கட்டாயம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தேன். ஆனால் அவரோ அதை அடுத்த நாள் காலை 6 மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தார் என சால்வே தெரிவித்தார்.

    சுஷ்மா மகள் பன்சூரி

    சுஷ்மா மகள் பன்சூரி

    எனினும் 6-ஆம் தேதி இரவே சுஷ்மா இறந்துவிட்டார். இதனால் சால்வேயிக்கு கொடுக்க வேண்டிய ஒரு ரூபாயை கொடுக்க முடியாமல் போயிற்று. இந்த நிலையில் வழக்கறிஞர் சால்வேயை நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்று சுஷ்மா மகள் பன்சூரி சந்தித்தார்.

    மகள் பன்சூரி

    மகள் பன்சூரி

    இதுகுறித்து சுஷ்மாவின் கணவர் கௌசல் ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுஷ்மாவின் கடைசி ஆசையை எனது மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார்.

    வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

    வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

    குல்பூஷண் ஜாதவிற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய சால்வேக்கு ரூ 1 கட்டணத்தை கொடுத்தார் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக ஹரிஷ் சால்வேயை வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் நியமித்தார்.

    ராணுவத்தால் கைது

    ராணுவத்தால் கைது

    சுஷ்மாவின் வேண்டுகோளை ஏற்று ரூ 1 கட்டணத்தில் ஜாதவுக்கு வாதாட அவர் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிதான் இந்த குஷ்பூஷண் ஜாதவ் ஆவார். ஈரானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

    இந்தியா வழக்கு

    இந்தியா வழக்கு

    இதையடுத்து ஜாதவுக்கு 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Union Minister Sushma Swaraj's last wish was fulfilled by her daughter Bansuri Swaraj. She promised to advocate Harish Salve who argues for Gulbhusan Jadhav in the International Court of Justice, Netherlands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X