டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசிர்வாதம் பண்ணுங்கக்கா.. நல்லா இருய்யா நல்லா இருய்யா.. கட்கரி தலையில் தட்டி வாழ்த்திய சுஷ்மா!

Google Oneindia Tamil News

Recommended Video

    கட்கரி தலையில் தட்டி வாழ்த்திய சுஷ்மா!-வீடியோ

    டெல்லி: டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த நிதின் கட்கரி அங்கிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து ஆசி பெற்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் விலாஸ் முட்டேம்வாரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    Sushma Swarajs Playful Blessing For Nitin Gadkari At BJP HQ

    கதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு!கதை கேளு.. கதை கேளு... 200ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு!

    இந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த முறை வாக்கு வித்தியாசங்கள் அதிகமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஆற்றிய நலத்திட்டங்கள் மீது மக்களுக்கு நல்லதொரு அபிப்ராயம் உள்ளது.

    தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் எங்கள் அரசு நிறைவேற்றிவிட்டது என்றார். இதையடுத்து பாஜக தலைமையகத்துக்கு வந்த சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார் நிதின். அப்போது சுஷ்மாவிடம் தலை வணங்கி ஆசி கேட்டார்.

    அதற்கு சுஷ்மாவும் சிரித்துக் கொண்டே முதுகில் தட்டிக் கொடுத்து தலையை வருடி, ஆசிர்வாதம் வழங்கினார். தன்னை விட 6 வயது மூத்த சுஷ்மாவிடம் பயபக்தியுடன் ஆசி கேட்டதும் அவரை விளையாட்டுத்தனமாக அசால்ட்டாக சுஷ்மா ஆசி வழங்கியதும் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

    English summary
    As Gadkari arrived, he bowed before Swaraj, who is six years his senior. Swaraj didn’t fail as she affectionately placed her hand on his head and showered blessings on Gadkari. The interaction was captured on camera.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X