டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் மக்களுக்கு வேலையே போச்சு.. கடன் அசல், வட்டியை வசூலிக்க கூடாது.. சு.சாமி முக்கிய கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பிரச்சினையால், விற்பனையும் ஆகவில்லை, வேலை வாய்ப்புகளும் இல்லை, எனவே, கடன்களை வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா.. தமிழகத்தின் நிலை என்ன?

    இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், COVID19 காரணமாக இந்தியாவில் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. எனவே இந்தியாவில் விதிவிலக்கு இல்லாமல் பல துறைகளிலும், ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறார்கள். இந்த ஊழியர்களும், விற்பனை செய்ய முடியாத, வணிகர்களும் எவ்வாறு வங்கிக் கடன்களை மீண்டும் செலுத்த முடியும்? எனவே, இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து கடன் அசல் மற்றும் வட்டி நிலுவைத் தொகையை இந்திய அரசு, நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    Suspend payments of all loan principals and interest: Subramanian Swamy

    சுப்பிரமணியன் சுவாமி, பாஜக அரசில் நிதியமைச்சருக்கான ரேஸில் இருப்பவர். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பாடுகளில் பாஜகவில் பலருக்குமே அதிருப்தியுள்ளது. இந்த நிலையில், மிக முக்கியமான இந்த கோரிக்கையை சுப்பிரமணியன் சுவாமி முன் வைத்துள்ளார்.

    கொரோனா: சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூட அறிவுறுத்தல் கொரோனா: சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூட அறிவுறுத்தல்

    Suspend payments of all loan principals and interest: Subramanian Swamy

    வங்கி கடன்கள் மட்டுமல்ல, அரசுமே வரி பாக்கியை வசூலிக்க கூடாது, கார்பொரேட் வரி, நில வரி உள்ளிட்ட எதையும் செலுத்த முடியாத அளவுக்கு தொழில் மந்தமாகியுள்ளது என்பதே பெரும்பாலான மக்கள் கருத்தாக உள்ளது. ராகுல் காந்தியும் கூட இந்திய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக இன்று எச்சரித்துள்ளார்.

    English summary
    Due to COVID19 demand problem has been compounded. Business in india, without exception are laying off employees. How can are these employees and crippled business re-pay bank loans ? India needs to suspend payments of all loan principals and interest dues till end of this year, says Subramanian Swamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X