டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் கோவில், ராமர் பாலம்.... காலையிலேயே ‘வெள்ளைச்சாமி’ பாட ஆரம்பிச்சிட்டாரு

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில், தமிழகத்தில் ராம் சேது பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என இன்று காலை முதலே பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் வென்றுள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார்.

Swamy urges centre to build Ram Temple

மோடி பதவி ஏற்பதற்குள்ளாகவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத். இதே கருத்தை வலியுறுத்தி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டும் வருகிறார்.

அவர் இன்றைய பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நான் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்ய இருக்கிறேன். ராமர் பிறந்த இடத்தில் வழிபாடு நடத்துவது என் அடிப்படை உரிமை. ஆகையால் அந்த இடத்தில் கோவில் கட்ட மோடி அரசு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ராமர் பாலத்தைக் குறிப்பிட்டுள்ள சுப்பிஅமணிய்ன் சுவாமி, அதை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி உச்சநீதிம்ன்றத்தை ஜூலை 1-ல் நாடப்போகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க பாஜக விரும்பினால்.. இதையெல்லாம் செஞ்சாகணும்!தமிழக மக்களை தன் பக்கம் இழுக்க பாஜக விரும்பினால்.. இதையெல்லாம் செஞ்சாகணும்!

English summary
BJP Rajya Sabaha MP Subramanian Swamy has urged Centre that Ram Temple should built in Ayodhya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X