டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டி20 பேட்டிங் தரவரிசை.. கோலி, கே.எல்.ராகுலுக்கு சரிவு.. பவுலிங் வரிசையில் அசர வைத்த பாகிஸ்தான் வீரர்!

Google Oneindia Tamil News

டெல்லி: டி20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது, துபாயில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை தொடரந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரின் அசத்தாலான ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

 விராட் கோலிக்கு சறுக்கல்

விராட் கோலிக்கு சறுக்கல்

உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் முதல் வெற்றி இதுவாகும். இந்த நிலையில் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் தொடர்ந்து பேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக அசத்திய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் சரிந்து சரிந்து 5-வது இடத்துக்கு சென்றுள்ளார்.

 முகமது ரிஸ்வான்

முகமது ரிஸ்வான்

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முறையே 40 மற்றும் 51 ரன்களள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ரம் அதிரடியாக 8 இடங்கள் முன்னேறி 3-வது இடத்துக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் இருக்கிறார்.

சாம்ஷி முதல் இடம்

சாம்ஷி முதல் இடம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த கேஎல் ராகுலும் தரவரிசையில் 2 இடம் சரிந்து எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஸ்காட்லாந்திற்கு எதிராக 46 ரன்களை எடுத்து 9 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். பவுலர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா வீரர் சாம்ஷி முதல் இடத்தில் உள்ளார்.

 ஷாஹீன் அப்ரிடி முன்னேற்றம்

ஷாஹீன் அப்ரிடி முன்னேற்றம்

அதுவும் முதல் 9 இடங்களில் ஸ்பின் பவுலர்களே உள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தடம் புரள வைத்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி 11 இடங்கள் முன்னேறி 12 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும். வங்காளதேசம் வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆல்-ரவுண்டர்கள் மத்தியில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பவுலிங்கில் டாப் 10 வரிசையில் இந்தியாவில் இருந்து யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Unbeaten Pakistan captain Babur Assam continues in 2nd position against India. Despite playing well in the match against Pakistan, captain Virat Kohli has slipped one place to 5th position
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X