டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

70 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளில் தீர்வே காண முடியாத ஜம்மு காஷ்மீர் விவகாரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு விடுதலை அடைந்தது முதல் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தீர்வு காணப்பட முடியாத ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கூறியிருந்தார்.

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மத்தியஸ்தம் செய்ய டிரம்ப்பை இந்திய அரசு கேட்டுக் கொள்ளவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டிரம்ப் தமது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஆக்கிரமிப்பு காஷ்மீர்

1947-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. 1947-ல் ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்த போது அதை இந்தியா தடுத்தது. அந்த யுத்தத்தின் போது ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அதனால் அப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

ஐநா சபை தலையீடு

ஐநா சபை தலையீடு

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநா சபைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா? இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டுமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் ஒப்புக் கொண்டது. அப்போதைய பிரதமர் நேரு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றுகையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்தார்.

பொது வாக்கெடுப்புக்கு உத்தரவு

பொது வாக்கெடுப்புக்கு உத்தரவு

சர்வதேச அளவில் ஐநா மத்தியஸ்துடன் நடந்த முதலாவது பேச்சுவார்த்தை இதுதான். இதனைத் தொடர்ந்து பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக ராணுவத்தை விலக்கும் வகையில் ஐநா பிரதிநிதி டிக்சன் இந்த விவகாரத்தில் தலையிட்டார். ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் டிக்சன் முன்வைத்தார். டிக்சனின் திட்டப்படி ஜம்மு, லடாக் பிராந்தியங்கள் இந்தியாவுடனும் காஷ்மீரின் வடக்கு பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பாகிஸ்தானுடனும் இணைக்கலாம் என்பதால்கும். ஆனால் இதனை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கவில்லை. அப்போதும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்க முயற்சித்து பின்வாங்கியது.

காமன்வெல்த் படை

காமன்வெல்த் படை

1951-ல் காமன்வெல்த் அமைப்பு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்தது. அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் ராபர் மென்சைஸ், காமன்வெல்த் படையை காஷ்மீரில் நிலை நிறுத்த வேண்டும் என யோசனை தெரிவித்தார். அத்துடன் இந்தியா- பாகிஸ்தான் கூட்டு படையையும் காஷ்மீரில் நிறுத்தவும் அதன்பின்னர் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் யோசனை தெரிவித்தார். இதை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்தியா நிராகரித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு பொதுவாக்கெடுப்புக்கு வலியுறுத்தியது. அப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பின. ஆனால் இந்தியா இதை ஏற்க மறுத்தது.

ஷேக் அப்துல்லா கைது

ஷேக் அப்துல்லா கைது

1953-ல் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவும் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் நேரு இதனை நிராகரித்து அவரை கைது செய்தார். 1953-ல் லண்டனில் பிரதமர் பேருவும் பாகிஸ்தான் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுவாக்கெடுப்புக்கு ஐநா பிரதிநிதியாக நிமித்ஸ் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் அமெரிக்கா சார்பு நிலைப்பாடு கொண்டவர் என்பதால் அதை நேரு நிராகரித்தார். இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா 1954-ல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்தது. இதன்பின்னர் பொதுவாக்கெடுப்பு உறுதிமொழியை நேரு கைவிட்டார். 1962-ல் காஷ்மீரின் மற்றொரு பகுதியை சீனா ஆக்கிரமிக்க இந்தியா-சீனா யுத்தம் ஏற்பட்டது. அப்போது சீனா ஆக்கிரமித்த அக்சாய்சின் பகுதி இன்னமும் அந்நாட்டு வசம்தான் இருக்கிறது.

இந்தியாவுடன் யுத்தம்

இந்தியாவுடன் யுத்தம்

அமெரிக்காவின் ராணுவ உதவி தந்த தெம்பில் 1965-ல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் யுத்தத்தை நடத்தியது பாகிஸ்தான். இதனையடுத்து தாஷ்கண்ட்டில் இருநாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது சோவியத் யூனியன் மத்தியஸ்தம் செய்தது. அமெரிக்கா, ஐநா ஆகியவை கொடுத்த அழுத்தங்களால் இந்த ஒப்பந்தம் உருவானது. அப்போது தாஷ்கண்ட்டில் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் மரணித்தார். 1971-ம் ஆண்டு மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் முடிவில் வங்கதேச தனிநாட்டை இந்தியா உருவாக்கியது. அப்போது சிம்லா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டது. அதாவது காஷ்மீர் விவகாரத்தில் இனி ஐநா அல்லது பலதரப்பு பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என அறிவிக்கப்பட்டது. இதையேதான் இன்று வரை இந்தியா தமது காஷ்மீர் குறித்த கொள்கையாக வைத்திருக்கிறது.

பயனற்ற பேச்சுகள்

பயனற்ற பேச்சுகள்

இதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்களிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும் ஆக்கப்பூர்வமான தீர்வு எட்டப்படவில்லை. 2001-ல் ஆக்ராவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்-பாகிஸ்தான் அதிபர் முசாரப் இடையேயான பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுவும் வெற்றிபெறாமல் போனது. மேலும் ஒவ்வொரு முறையும் ஜம்மு காஷ்மீர் குறித்து ஐநா பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட்டு வருகிறது. ஆனால் சர்வதேச அரசியல் சூழலில் இந்தியாவுக்கு காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் எந்தவித அழுத்தத்தையும் தராமல் இருந்தது. தற்போது டிரம்ப் தெரிவித்த கருத்தால் சர்வதேச அளவில் காஷ்மீர் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது.

English summary
Here is the history of Jammu Kashmir talks in the International Level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X