டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் தமிழக எம்.பி.க்கள்.. சூப்பர் காரணம் இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வீடுகள் ஒதுக்கீடு... கனிமொழி மற்றும் மாணிக் தாகூரை சுற்றும் எம்.பி.க்கள்

    டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட எம்.பி.களுக்கு இன்னும் வீடு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்களுக்கான வீடுகள் விரைவில் ஒதுக்கவுள்ள நிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் மாணிக் தாகூர் ஆகியோரிடம் தமிழக எம்.பி.க்கள் தங்களுக்கு நல்ல வீடுகளை ஒதுக்க சொல்லி கேட்டு வருகிறார்களாம்.

    நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களுக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படுவது வழக்கம். 2014 முதல் 2019 வரையில் 180 எம்.பி.,க்கள் வரை, தங்களுக்கு வீடுகள் கிடைக்காமல் அரசின் சுற்றுலா விடுதிகளில் தங்க வேண்டியிருந்தது.

    கடந்த 2019, ஏப்ரலில் நடந்த லோக்சபா கூட்டத்தொடரின் போது கூட 35 எம்.பி.,க்கள், தங்குவதற்கு இடமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கு 35 கோடி ரூபாய் வரை செலவானது என்று தகவல்கள் வெளியானது. தற்போது, நார்த் அவென்யூவில் 232 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் தற்போது 193 எம்.பி.,க்கள் தங்கியுள்ளனர்.

    "இதுக்குதான் பணம் தந்தியாண்ணா".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்

    300பேர் முதல்முறை எம்பி

    300பேர் முதல்முறை எம்பி

    அதேபோல சவுத் அவென்யூவில் 196 குடியிருப்புகளில் 163 பேர் தங்கியுள்ளனர். இதில் தங்கியுள்ள எம்.பி.க்களில் பலர் தங்களது பதவி காலம் முடிவடைந்தாலும் இந்த வீடுகளை காலி செய்வதில்லை. தற்போது, 300 பேர், முதன்முறையாக, எம்.பி.,யாகியுள்ளனர். அவர்களுக்கு, தற்காலிகமாக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக இடங்களில் தங்கியுள்ள எம்.பி.க்களுக்கு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    நார்த் அவென்யூவில் 36 பிளாட்டுகள்

    நார்த் அவென்யூவில் 36 பிளாட்டுகள்

    இதற்காக புதுடில்லியில் 92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 36 குடியிருப்புகள் தயார் நிலையில் உள்ளன. இவை நவீன வசதிகளுடன், பாதுகாப்பு மிகுந்த நார்த் அவென்யூவில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளாட்டும் இரண்டு அடுக்குகளை கொண்ட வகையிலும், பூகம்பத்தை தாங்கும் தொழில்நுட்பத்துடன் 36 பிளாட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய வீடுகளில், நவீன சமையலறை, நான்கு குளியலறைகள், லிப்ட், கார் பார்க்கிங், சூரிய ஒளி மின்சாரம், எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பாஜக எம்பி தலைவர்

    பாஜக எம்பி தலைவர்


    நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் ஏதாவது ஒரு குழுவில் உறுப்பினராக இடம் கிடைத்து விடும். சிலர் இந்த குழுக்களின் தலைமைப் பொறுப்புக்கும் வருவது உண்டு. அந்த வகையில் புதிய எம்.பி.களுக்கு வீடு ஒதுக்கும் பணிகளை கவனிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பாஜக எம்பி-யான சி.ஆர்.பாட்டீல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    வீடுகள் கேட்கும் எம்பிக்கள்

    வீடுகள் கேட்கும் எம்பிக்கள்

    இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த கனிமொழி மற்றும் மாணிக் தாகூர் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்த குழுதான் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை எம்.பி.களுக்கு வழங்க உள்ளனர். இதனால் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.கள் தங்களுக்கு அதிக வசதிகள் கொண்ட வீடுகளை ஒதுக்க கோரி இவர்கள் இருவரிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    Tamil mps asked to kanimozhi and manik thakur, we need good space house in delhi, manik thakur and kanimozhi mp appointed as new house allote team member for mps
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X