டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா புயல் நிவாரணம்.. முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்,முதல்வர் பேட்டி- வீடியோ

    டெல்லி: கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறது. கஜா புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

    கடந்த 16-ம் தேதி தாக்கிய கஜா புயல் பாதிப்புகளில் இருந்து, டெல்டா மாவட்ட மக்கள், மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

     Tamil Nadu government asking Rs 15,000 crore For gaja relief fund

    கஜா புயலால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், விவசாய நிலங்கள் நாசமாகி விட்டன. என்றாலும் நிவாரண பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ.14 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துறைவாரியாக எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்ற விபரத்தையும் மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் வாரியத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மின் வாரியத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கஜா புயல் பாதிப்பு.. இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமிகஜா புயல் பாதிப்பு.. இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி

    மேலும் இன்று காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து தமிழகத்துக்குத் தேவையான புயல் நிவாரண நிதியைக் கேட்டுள்ளார். விரைவில் மத்தியக் குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    {document1}

    English summary
    Tamil Nadu government asking Rs 15,000 crore For gaja relief fund
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X