டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்!

By Rayar
Google Oneindia Tamil News

புதுடெல்லி: இந்தியாவில் 34 லட்சம் கொரோனா கேஸ்கள் கணக்கில் காட்டப்படவில்லை என்று அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கொரோனா பரிசோதனை செய்வதில் அதிக எண்ணிக்கையிலும் , ஆக்டிவ் கேஸ்கள் இல்லாத மாநிலமாகவும் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா என்னும் உயிர்கொல்லி நோய் உலக மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து நம்பிக்கை அளித்தாலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனாவை கண்டறிய பிசிஆர் சோதனைகள், ஆண்டிபாடி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்கொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

 அதிக அளவில் பிசிஆர்

அதிக அளவில் பிசிஆர்

ஒரு சில மாநிலங்களின் கிடைத்த தகவலின்படி ஆண்டிபாடிக் சோதனைகளை விட, பிசிஆர் சோதனைகள் கொரோனா தொற்றை கண்டறிவதில் சிறந்ததாக விளங்குகிறது என தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொடக்க காலத்தில் பிசிஆர் சோதனைகள் 100 சதவீதம் அளவு இருந்தது. அனால் இது தற்போது 60 சதவீதமாக குறைந்து விட்டது. அதே வேளையில் ஆண்டிபாடி சோதனை 5.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்த சோதனைகளில் 40 சதவீதம் ஆகும்.

 தரவுகள் சொல்வது என்ன

தரவுகள் சொல்வது என்ன

பிசி ஆர் சோதனைகளை கைவிட்டு ஆண்டிபாடி சோதனைகளை கையில் எடுத்ததால் நாட்டில் பல மாநிலங்களில் தெளிவான கொரோனா தொற்றை கண்டறிய முடியவில்லை என்று தரவுகள் கூறுகின்றன. இதனால் இந்தியாவில் 3.4 மில்லியன் (அதாவது 34 லட்சம்) தொற்றை கணக்கில் காட்டவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

 பிராடுத்தனம்

பிராடுத்தனம்

பல மாநிலங்களில் தொற்றை முறையாக கணக்கில் காட்டவில்லை . அதாவது மகாராஷ்டிராவில் 24 லட்சம் கேஸ்களில் 17 லட்சம் மட்டுமே கணக்கில் கட்டப்பட்டுள்ளது. 6.4 லட்சம் கேஸ்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இதேபோல் டெல்லியில் 4.3 லட்சம் கேஸ்கள் , தெலுங்கானாவில் 3.2 லட்சம் கேஸ்கள் , ஆந்திராவில் 3.2 லட்சம் கேஸ்கள், உத்தரபிரதேசத்தில் 3.1 லட்சம் கேஸ்கள் கணக்கில் காட்டப்படவில்லை

 தமிழகம் முதல் இடம்

தமிழகம் முதல் இடம்

ஆனால் தமிழ்நாடு கொரோனா தொற்றை சரியாக கணக்கில் காட்டியுள்ளது. இங்கு 7.7 லட்சம் கேஸ்களில் 7.6 லட்சம் கேஸ்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கொரோனா கேஸ்களை சரியாக காண்பித்து முதல் இடத்தில் உள்ளது. 2.4 லட்சம் கேஸ்களில் 2.3 லட்சம் கேஸ்கள் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் உள்ளது. இங்கு 1.5 லட்சம் கேஸ்களில், 1.4 லட்சம் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

 10,000 பேருக்கு 550 மட்டுமே...

10,000 பேருக்கு 550 மட்டுமே...

இந்தியாவில் 10,000 பேருக்கு 550 என்ற அளவிலேயே பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது மிக மிக குறைவாகும். அதிக பரிசோதனை செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. இங்கு 100 சதவீதம் அளவு பரிசோதனை செய்யபடுகிறது. தமிழகத்தில் 10,000 பேரில் 1,390 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

 பீகார் வொர்ஸ்ட்

பீகார் வொர்ஸ்ட்

கர்நாடகாவில் 10,000 பேரில் 1,310, ஆந்திராவில் 10,000 பேருக்கு 993 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் மிக மோசமாக பரிசோதனை மேற்கொள்ளும் பட்டியலில் முதல் இடத்தில் பீகார் உள்ளது.
அங்கு 10,000 பேரில் வெறும் 148 பேருக்குத்தான் பரிசோதனை நடக்கிறது. தெலுங்கானாவில் 10,000 பேருக்கு 185 பேருக்கும், குஜராத்தில் 10,000 பேருக்கு 215 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடக்கிறது.

 தெலுங்கானா மோசம்

தெலுங்கானா மோசம்

சதவீதம் அடிப்படையில் பீகார் 15 சதவீதமும், தெலுங்கானா, குஜராத்தில் முறையே 17 சதவீதம், 22 சதவீதம் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆக்டிவ் கேஸ்கள் மிக மிக குறைவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழத்தில் தற்போது எந்த ஆக்டிவ் கேஸ்களும் இல்லை.
ராஜஸ்தானிலும் ஆக்டிவ் கேஸ்கள் இல்லை. பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கள் குறைவாகவே உள்ளன.

 மோசமான பீகார்

மோசமான பீகார்

ஆனால் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடித்த பீகாரில் ஆக்டிவ் கேஸ்கள் மிக அதிக அளவு உள்ளது. அங்கு 138 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதேபோல் தெலுங்கானா, குஜராத்திலும் ஆக்டிவ் கேஸ்கள் அதிகமாக உள்ளன. மொத்தத்தில் இந்த தரவுகள் ஆன்டிபாடி சோதனையை விட பி.சி.ஆர் சோதனையை சிறந்தது என காட்டுகிறது. முறையாக சோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டால்தான் கொரோனா பாதிப்பை முழுமையாக குறைக்க முடியும்.

English summary
Tamil Nadu is number one in the state in terms of testing for corona and no active cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X