டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை!

டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Prakash Raj Explanation : நான் தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசினேனா?.. பிரகாஷ் ராஜ் விளக்கம்!- வீடியோ

    டெல்லி: டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.

    லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மத்திய பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார். இவர் சுயேட்சையாக அங்கு தேர்தலில் நின்றார்.

    இவருக்கு கர்நாடகாவில் ஆம் ஆத்மி ஆதரவு அளித்தது. இதையடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து பிரகாஷ் ராஜ் நேற்று பிரச்சாரம் செய்தார்.

    டெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்டெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியானது அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

    பிரகாஷ் ராஜ் கருத்து

    பிரகாஷ் ராஜ் கருத்து

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்த பிரகாஷ் ராஜ், நான் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவன் கிடையாது. ஆனால் அவர்கள் டெல்லிக்கு நிறைய நன்மை செய்து இருக்கிறார்கள். டெல்லியின் கல்வி தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன்.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    தமிழக மாணவர்கள் டெல்லி பல்கலையில் சேர்வதால் டெல்லி மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது உண்மை. கெஜ்ரிவால் இப்படி சொல்வதில் தவறு எதுவும் கிடையாது. டெல்லி மாணவர்களின் உரிமை தமிழக மாணவர்களால் தட்டிப்பறிக்கப்படுகிறது.

    கன்னடன்

    கன்னடன்

    டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனை தீரும். நான் தமிழனாக இருந்து கொண்டு இப்படி பேசலாமா என்கிறார்கள். நான் தமிழன் அல்ல. நான் கன்னடன். தமிழ் படங்களில் நடித்து இருக்கிறேன், என்றுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு டெல்லி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tamil Students are taking away Delhi students chances, Which is not good for Delhi people, says Prakash Raj.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X