டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்.. எந்தெந்த பகுதிகள்?.. மத்திய அரசின் லிஸ்ட் இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    ஹாட்ஸ்பாட் பகுதிகள் என்பது என்ன ? தமிழகத்தில் எங்கு உள்ளது?

    நாடு முழுவதும் கொரோனா பாதித்த 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் 207 மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளதால் அவை வெள்ளை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

    353 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பே இல்லாததால் அவர் பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்வு.. விஜயபாஸ்கர் விளக்கம் தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1242 ஆக உயர்வு.. விஜயபாஸ்கர் விளக்கம்

    சிவப்பு

    சிவப்பு

    அது போல் டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர், ஸ்ரீநகர், நாக்பூர், புனே, இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மாவட்டங்கள் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா இருந்தால் அது ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது. அவற்றில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அடக்கம். சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அல்லது கொரோனா பரவும் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    கொரோனா ஹாட்ஸ்பாட்

    கொரோனா ஹாட்ஸ்பாட்

    மேற்கண்ட மாவட்டங்களில் 15 பேருக்கு மேல் கொரோனா பாதித்திருப்பதால் அவை ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக கருதப்படுகிறது. அதாவது இங்கு 15 பேருக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

    பச்சை மண்டலங்கள்

    பச்சை மண்டலங்கள்

    அது போல் சிகப்பு, வெள்ளை மண்டலங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அது போல் புதுவையும் வெள்ளை மண்டலத்தில் வருகிறது. அது போல் நாட்டில் ரேபரேலி, வாரணாசி, ஹரித்வார், கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    விஜயபாஸ்கர்

    விஜயபாஸ்கர்

    இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என தெரிகிறது.

    English summary
    Centre has classified 170 districts as corona hotspots areas. Here restrictions will not be lifted. In Tamilnadu 22 districts are classified as Red zones.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X