டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி நியூஸ்... 5 மாநிலங்களில் துளிர்க்க ஆரம்பித்தது பொருளாதாரம்.. லிஸ்ட்டில் தமிழ்நாடும் இருக்கு!

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுனிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில் கர்நாடகா, தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதில் முன்னிலையில் உள்ளது ஒரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கிய போக்குவரத்து..தகவல்கள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தொழிற்துறைகள், பொது போக்குவரத்து உள்ளிட்டவை இயங்காததால் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியானது.

    தற்போது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில் லாக்டவுனில் இருந்து பல தளர்வுகளும் சில நாடுகள் முழு தளர்வுகளையும் அளித்துள்ளன. பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஊரடங்கில் தளர்வு.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது ஊரடங்கில் தளர்வு.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

    தமிழகம்

    தமிழகம்

    பொருளாதாரத்திலிருந்து மீள்வதிலிருந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒரு பொருளாதார நிபுணர் கரீமா கபூர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கர்நாடகா, கேரளா, தமிழகம், பஞ்சாப், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்து வருகின்றன.

    பங்களிப்பு

    பங்களிப்பு

    மின் பயன்பாடு, போக்குவரத்து இயக்கம், மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு வந்த விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு கிட்டதட்ட 27 சதவீதமாகும்.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    பெரும் தொழில் துறைகளை கொண்ட மகாராஷ்டிராவும் குஜராத்தும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பின்தங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் இன்னும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

    ஹரியானா

    ஹரியானா

    பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மின்சார தேவை, விவசாய தேவை ஆகியவற்றில் முன்னேற்றம் உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியிலும் மின் தேவை அதிகரித்துள்ளது. வைரஸ் தொடர்பான மாற்றங்கள் என்பதால் வரும் மாதங்களில் தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu, Karnataka and 3 more states leads recovery in Economy as relaxations in Curfew across the nation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X