டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா.. வித்தியாசமாக பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்பிக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் வாழ்க! தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு- வீடியோ

    டெல்லி: லாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா என கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை எம்பி சுப்பராயன் பதவியேற்று கொண்டார்.

    17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் நேற்றும் இன்றும் எம்பிக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

     Tamilnadu MPs took oath in different shades

    இந்தி திணிப்பு என்ற பிரச்சினை தமிழகத்தில் எழுந்ததால் அது குறித்து பிரதிபலிக்கும் விதமாக தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வரும் முன்னாள் சபாநாயகரும் வைத்திலிங்கம் தமிழில் பதவியேற்றுக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டார். அதற்கடுத்து வந்த தமிழக எம்பிக்களும் தமிழிலேயே பதவியேற்றனர்.

    தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு.. கொடி கட்டிப் பறந்த தமிழ் !

    அப்போது சிலர் முழங்கிய கோஷங்கள் பின்வருமாறு:

    • திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் - காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க
    • தயாநிதி மாறன் எம்பி- தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார்
    • பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம்- வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வாழ்க தமிழ்
    • விழுப்புரம் எம்பி ரவிக்குமார்- வாழ்க தமிழ், வாழ்க பெரியார்
    • ஈரோடு எம்பி கணேசமூர்த்தி- தமிழ்நாடு என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்
    • கோவை எம்பி சுப்பராயன்- லாங் லிவ் செகுலரிசம், லாங் லிவ் இந்தியா
    • கரூர் ஜோதிமணி- வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழகம்- பாரத் மாதா கி ஜே
    • பெரம்பலூர் எம்பி பாரி வேந்தர்- தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க
    • சிதம்பரம் எம்பி தொல் திருமா- வாழ்க அம்பேத்கர் பெரியார் ,வெல்க ஜனநாயகம், சமத்துவம்
    • தேனி எம்பி ரவீந்திரநாத் குமார்- வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்
    • தூத்துக்குடி எம்பி கனிமொழி- வாழ்க தமிழ், வாழ்க பெரியார்
    • கன்னியாகுமரி எம்பி எச் வசந்தகுமார்- ஜெய் ஜவான், ஜெய் கிசான், பெருந்தலைவர் காமராஜ் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க

    என வித்தியாசமாக கோஷமிட்டனர். எனினும் தமிழ் வாழ்க என கோஷமிட்டதால் பாஜக எம்பிக்கள் பதிலுக்கு பாரத் மாதா கி ஜே என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் கோஷமிட்டனர்.

    English summary
    Tamilnadu MPs took oath in different shades as they raise Tamil Vazhga, BJP MPs raise Bharat Mata ki Jai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X