டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாண்டவ் வெப் சீரிஸ்.. இந்து மத கடவுளை இழிவுபடுத்தியாக கடும் எதிர்ப்பு.. அமேசான் பிரைமுக்கு சம்மன்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்து மத கடவுளை இழிவாக காட்சிப்படுத்தியதாக tandav வெப் சீரிஸ்க்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இதையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், அமேசான் பிரைம் இந்திய நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமேசன் பிரைமில் வெளியான இந்தி வெப்சீரிஸ் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த வெப் சீரிஸில் முன்னணி பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர், டிக்மான்ஷு துலியா, டினோ மோரியா, குமுத் மிஸ்ரா, மொஹமட் ஜீஷன் அய்யூப், கவுஹர் கான் மற்றும் கிருத்திகா கம்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

tandav வெப் சீரிஸ்

tandav வெப் சீரிஸ்

இந்த tandav வெப் சீரிஸில் இந்து மத கடவுளை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இதையடுத்து தாண்டவ் வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும், இதை தயாரித்த தயாரிப்பாளர், கதையாசிரியர், நடிகர்கள் மற்றும் அமேசான் பிரைம் இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் மும்பை கோட்காபார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இயக்குனர் மீது வழக்கு

இயக்குனர் மீது வழக்கு

இதன்பேரில் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் மற்றும் தயாரிப்பாளர், கதையாசிரியர், நடிகர்கள் மற்றும் அமேசான் பிரைம் இந்தியா நிறுவனத்தின் மீதும் கோட்காபார் போலீசார் முதல் தகவல் அறிக்கை செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 295A மற்றும் 67A பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடிதம்

கடிதம்

இந்து மத கடவுளை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை வட கிழக்கு லோக்சபா தொகுதி எம்பியும், பாஜக தலைவர்களில் ஒருவருமாகிய மனோஜ் கோட்டக் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

புண்படுத்தும் காட்சிகள்

புண்படுத்தும் காட்சிகள்

tandav வெப் சீரிஸில இந்து கடவுளை காட்சிப்படுத்தியுள்ள விதம் தங்களது மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது போன்ற முயற்சிகள் அடிக்கடி நடக்கின்றன. 'தந்தவ்' வலைத் தொடரில் இந்து கடவுள்களும் தெய்வங்களும் கேலி செய்யப்பட்டதாக பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்து கருத்துக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

மத்திய அரசு நோட்டீஸ்

மத்திய அரசு நோட்டீஸ்

இதையடுத்து இந்து மத கடவுளை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைத்துள்ளதாக tandav வெப் சீரியஸ் மீது எழுந்துள்ள புகாரையடுத்து அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.

English summary
the Information and Broadcasting Ministry on Sunday issued a notice to Amazon Prime over its series 'Tandav'. The move comes after several leaders protested against it with BJP MP Manoj Kotak writing to I&B minister Prakash Javadekar seeking a ban on the series for ridiculing Hindu deities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X