Just In
சுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், தருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது
டெல்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

எஸ்.பி.பி முதல் சாலமன் பாப்பையா வரை... பத்ம விருதுகள் அறிவிப்பு!
நாட்டின் 72-வது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்களான மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், குஜராத் மாஜி முதல்வர் கேசுபாய் படேல், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகிய 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது