டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருமே முன்வரவில்லை.. ஏர்இந்தியாவை வாங்க போகும் இந்தியாவின் "அயர்ன் மேன்".. களமிறங்கும் ஜாம்பவான்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஏர்இந்தியா நிறுவனத்தை விற்க முன் வந்துள்ள நிலையில் அதை யாருமே வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் தற்போது முக்கியமாக நிறுவனம் ஒன்று ஏர்இந்தியாவை ஏலம் எடுக்க முடிவு செய்துள்ளது.

Recommended Video

    Air India-வை ஏலம் எடுக்கும் TATA | Nobody wants Air India? | Oneindia Tamil

    இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் இந்திய ரயில்வேயில் முழுக்க முழுக்க பெரிய அளவில் தனியார் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை மத்திய அரசு தனியார் வசம் அளிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக ஏர்இந்தியா பெரிய அளவில் இழப்பில் சென்று கொண்டு இருந்தது.

    துவங்கியது மெகா மீட்பு பணி.. வெளிநாடுகளுக்கு சென்ற ஏர்இந்தியா விமானங்கள்.. மீட்கப்படும் இந்தியர்கள்!துவங்கியது மெகா மீட்பு பணி.. வெளிநாடுகளுக்கு சென்ற ஏர்இந்தியா விமானங்கள்.. மீட்கப்படும் இந்தியர்கள்!

     பெரிய இழப்பு

    பெரிய இழப்பு

    ஏர் இந்தியாவிற்கு தற்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதேபோல் மொத்தமாக அந்த நிறுவனம் 70000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செல்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 7600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    தனி குழு

    தனி குழு

    ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை வாங்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று கடந்த ஜூன் வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் சில நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், அந்த நிறுவனங்களுக்கு போதிய நிதி பின்புலம் உள்ளிட்ட தகுதி இல்லை என்று விண்ணப்பம் நீக்கப்பட்டது.

    பெரிய நிறுவனம் எதுவும் இல்லை

    பெரிய நிறுவனம் எதுவும் இல்லை

    பெரிய நிறுவனங்கள் எதுவும் ஏர் இந்தியாவை வாங்க முன் வரவில்லை. இந்த நிலையில் இதற்கான விண்ணப்ப தேதி இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. அது வரை இதில் முதலீடு செய்ய முடிவு செய்து இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட விண்ணப்பத்தை திரும்ப பெற்றது. கொரோனா பாதிப்பால் விமான துறையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஏர் இந்தியாவை யாரும் வாங்க முன் வரவில்லை.

    யார் வாங்குகிறார்?

    யார் வாங்குகிறார்?

    இந்த நிலையில் ஏர் இந்தியாநிறுவனத்தை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் ஸ்டீல் துறையில் புரட்சி ஏற்படுத்திய அதே அயர்ன் மேன் குடும்பமான டாடா குடும்பம்தான் ஏர் இந்தியாவை வாங்க உள்ளது. இதற்கான விருப்பத்தை ரத்தன் தெரிவித்து இருக்கிறார். ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்து இருக்கும் ஒரே நிறுவனமாக டாடா குழுமம் மாறியுள்ளது.

    டாடா எப்படி

    டாடா எப்படி

    நாங்கள் வணிகர்கள் இல்லை நாங்கள் தொழிலதிபர்கள் என்று கூறியவர்தான் ரத்தன் டாடா. அதே ரத்தன்தான் தற்போது ஏர்இந்தியாவை வாங்க முடிவு செய்துள்ளார். ஏர் இந்தியாவை வாங்க விண்ணப்பித்த ஒரே நிறுவனமென்பதால் பெரும்பாலும் டாடாதான் ஏர் இந்தியாவை வாங்கும் என்கிறார்கள். ஏற்கனவே விமான நிறுவனமான விஸ்தாராவில் டாடா குழுமம் 51% பங்குகளை கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவை வாங்க டாடா முடிவு செய்து இருப்பது ஏன்? இதற்கு பின்னணி என்ன ? என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.

    English summary
    TATA to buy Air India: Becomes the only contender for the bid this month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X