டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்.. தெலுங்கு தேசம் மீண்டும் போராட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தினால், தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. அதே நேரம், அக்கட்சியைச் சேர்ந்த மத்தியமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது

TDP MP Naramalli Sivaprasad protesting in Parliament for Andhras special status

இந்த நிலையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த குளிர்க்கால கூட்டத் தொடரிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் தினம் ஒரு வேடம் அணிந்து போராட்டம் நடந்து வருகிறது. தெலுங்கு தேசம் எம்.பி.க்களில் ஒருவரான நரமல்லி சிவபிரசாத் மாயவித்தைகாரன் வேடம் அணிந்து போராட்டம் நடத்தினார்.

கடந்த கூட்டத் தொடரின் போது, பள்ளி மாணவன், மந்திரவாதி, விஸ்வா மித்ரர் வேடம், பெண் வேடம் என பல வேடங்களில் வந்திருந்தார். இருப்பினும் எந்த பலனும் ஏற்படவில்லை.

English summary
TDP MP Naramalli Sivaprasad is today dressed up as a magician during a protest in Parliament over demands for Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X