டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்ல மோடி தடுப்பூசி போடணும்..அப்புறம்தான் நான் போடுவேன்...அடம்பிடிக்கும் தலைவர்..யாருனு பாருங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நான் அதை போடுவேன் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகை நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின், 'கோவாக்சின்' தடுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Tej Pratap says Modi should take first COVID vaccine, then, we will also take it

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2-ம் கட்ட ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடந்தது. ஏற்கனவே முதற்கட்ட ஒத்திகை நடந்து முடிந்து விட்டது. எனவே நாடு முழுவதும் இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதாலும், அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் எழுவதாலும் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டும் வகையில் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி) தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் கருத்து தெரிவித்து உள்ளார். தடுப்பூசி தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தேஜ் பிரதாப் யாதவ் பதிலளித்து கூறியதாவது:-
நாட்டில் தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடி முதலில் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் தடுப்பூசி எடுத்து கொள்வேன். நாம் அதனை தயங்காமல் போடுவோம் என்று கூறியுள்ளார்.

 ஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம் ஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்

'பா.ஜ.க. அரசின் தடுப்பூசியை நான் நம்ப மாட்டேன். அதனால் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi should first get the corona vaccine. Rashtriya Janata Dal leader Tej Pratap Yadav has said that he will put it up only after that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X