டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாளை முதல் கோயில்களைத் திறக்க மத்திய அரசு தளர்வுகளை அளித்துள்ள நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் இதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

Recommended Video

    முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

    கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் திருப்பதி உள்ளிட்ட கோயில்கள் தாங்களாகவே பக்தர்கள் அனுமதியை ரத்து செய்தன. மார்ச் 24 -ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தவுடன் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    ஆனால் சுவாமிக்கு தேவையான பூஜை, புனஸ்காரங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில் இந்தியாவில் சில செயல்பாடுகளுக்கு மத்திய அரசு தளர்வுகளை அளித்து வருகிறது.

    ஊரடங்கில் தளர்வு.. பெட்ரோல், டீசல் விலையும் ஊரடங்கில் தளர்வு.. பெட்ரோல், டீசல் விலையும் "தளர்வு".. சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு கிடுகிடு

    நிர்வாகம்

    நிர்வாகம்

    அந்த வகையில் தற்போது நாளை முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து கிடைத்த இந்த உத்தரவால் பல மாநிலங்களில் கோயில் நிர்வாகத்தினர் தயார் நிலையில் உள்ளனர். குருக்கள் மாஸ்க் அணிந்தபடி சுவாமி சிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களை திறக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதே வேளையில் டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிஸா ஆகிய மாநிலங்கள் நாளைக்குள் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கோயில்களை திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என எண்ணியுள்ளன.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோயில்கள் திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் வழிப்பாட்டு தலங்களின் நிர்வாகிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் கோயில்களை திறப்பது என்ற முடிவு செய்யப்பட்டது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    அதே நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரித்த போது கொரோனா தொற்றுக்கு பின்னர் கோயில்களில் அனுபவங்கள் எவ்வாறு மாறுகிறது என்பதை பார்க்க வேண்டும் என்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் கோயில்கள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Most of the states in India are going to reopen worship places from tomorrow with more caution and optimism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X