டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உன்னவ் வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம்.. தற்காலிக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எம்எல்ஏ

Google Oneindia Tamil News

Recommended Video

    உன்னாவ் பாலியல் வழக்கு... ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்... என்ன நடந்தது ?

    டெல்லி:உன்னவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கு எம்எல்ஏ குல்தீப் சிங் சீன்கர் அழைத்து வரப்பட்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது வேலை கேட்க குல்தீப்பின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    Temporary Court Set Up At AIIMS to record survivor’s statement

    அப்போது அவரை குல்தீப், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து ரே பரேலிக்கு அந்த பெண், தனது உறவினர்களுடன் ஜூலை 28-ஆம் தேதி காரில் சென்ற போது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பெண்ணின் உறவினர்கள் பலியாகிவிட்டனர்.

    ஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்!ஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்!

    இதையடுத்து பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தை பெறுமாறு மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மாவிடம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்துக்கு எம்எல்ஏ குல்தீப் சீன்கர் அழைத்து வரப்பட்டார். அவருடன் மற்றொரு குற்றவாளி சஷி சிங்கும் அழைத்து வரப்பட்டார்.

    English summary
    Temporary Court Set Up At AIIMS to record survivor’s statement, expelled BJP MLA Kuldeep Singh Sengar brought to temporary court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X