டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரக்யா சிங் பற்றி ராகுல் காந்தி சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிரும் ட்விட்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி: "தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர்", என காங்கிரஸ் சீனியர் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ள ட்வீட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்தான் என்று, பாஜக கட்சியை சேர்ந்த போபால் தொகுதி எம்பி பிரக்யா சிங் நேற்று, லோக்சபாவில், பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து உடனடியாக அவரது பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டடது.

    Terrorist Pragya, says Rahul Gandhi

    ஆனால் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரக்யா பேச்சு கண்டனத்திற்குரியது, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தை குறித்து விவாதம் நடத்த முடியாது என்றார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிட்டு அவையில் புயலை கிளப்பின.

    முன்னதாக, நாடாளுமன்றம் வெளியே நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரக்யா சிங் வார்த்தை என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் மனதில் உள்ள வரிகள்தான். எனவே அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என கூறி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என தெரிவித்தார். இந்த பேட்டிக்கு சில நிமிடங்கள் கழித்து, ராகுல் காந்தி டுவிட்டர் கணக்கிலிருந்து ஒரு ட்வீட் வெளியானது. அதில்,

    கோத்தபாய ராஜபக்சே இன்று இந்தியா வருகை- டெல்லியில் வைகோ தலைமையில் போராட்டம்கோத்தபாய ராஜபக்சே இன்று இந்தியா வருகை- டெல்லியில் வைகோ தலைமையில் போராட்டம்

    தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை, தேசபக்தர் என அழைக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது கருப்பு தினம். இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா, பிரக்யா சிங் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பாஜக கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடை விதித்து இன்று காலை உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், மக்களவை உறுப்பினரை தீவிரவாதி என ராகுல் காந்தி அழைத்திருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தவும் தயங்கவில்லை.

    English summary
    Terrorist Pragya calls terrorist Godse, a patriot. A sad day, in the history of India’s Parliament, says Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X