டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் போது.. பாத்திரங்களில் ஒலி எழுப்பி புறக்கணித்த விவசாயிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாத்திரங்களில் ஒலி எழுப்பி புறக்கணித்தனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்வரிசை போராட்டக்கள வீரர்களுக்கு (சுகாதாரத்துறை, போலீஸ், தூய்மை பணியாளர்கள்) ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதற்காக 'ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது' முதன்முதலில் மக்கள் அனைவரும் வீடுகளில் கைதட்டியதுடன், தட்டுகளில் ஓசை எழுப்பினர். விளக்கேற்றினர்.

 Thali-bajao 2.0: Delhi Protesting farmers bang utensils at borders during PM Modis Mann ki Baat

ஆனால் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சாப்பிடும் தட்டுகளை தட்டி ஓசை எழுப்பி , கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை இன்று தான் இந்த ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் வானொலியில் உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் விவசாயிகள் (டெல்லி-ஹரியானா) மற்றும் காசிப்பூர் (டெல்லி-உபி) எல்லைகளில் தட்டுகளில் ஓசை எழுப்பினார். ஆக்ரோசமாக கோஷங்களையும் எழுப்பினர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர் உழைப்பிலே உருவான பொருள்களையே பயன்படுத்துவோம்: பிரதமர் மோடிஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர் உழைப்பிலே உருவான பொருள்களையே பயன்படுத்துவோம்: பிரதமர் மோடி

முன்னதாக கடந்த வாரம் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினர், பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தின் போது, பாத்திரங்களின் மூலம் ஒலி எழுப்பி புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலா இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார், அதன்படி இன்று, டெல்லி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் பாத்திரங்களில் இடி முழக்கம் போல் ஓலி எழுப்பியபடி அணிவகுத்துச் செல்வதைக் காண முடிந்தது, அத்துடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன் மன் கிபாத் நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

English summary
PM Modi on Sunday addressed the last Mann ki Baat of this year and agitating farmers at the Singhu (Delhi-Haryana) and Ghazipur (Delhi-UP) borders banged utensils during the radio programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X