டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanthi TV Exit polls : செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

    டெல்லி: தமிழகத்தில் 38 லோல்சபா தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி சேனல் இன்று வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொகுதி வாரியாகவும், எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும் என்று கூறுகிறது, இந்தக் கருத்துக் கணிப்பு. இதன்படி, திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என்றும், அங்கு 39-45% பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும் கூறியுள்ளனர்.

    திமுகவிற்கு 35-41% பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். இதில் மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், அமமுகவிற்கு 7-10% வாக்குகளும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7% பேரும், நாம் தமிழருக்கு 3-6% பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கணிப்புகளை விடுங்க... சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு வராமலா போய்விடும்.. சீமான் தம்பிகள் நம்பிக்கை! கணிப்புகளை விடுங்க... சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு வராமலா போய்விடும்.. சீமான் தம்பிகள் நம்பிக்கை!

    மத்திய சென்னை

    மத்திய சென்னை

    மத்திய சென்னை தொகுதியில், திமுக கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44% பேர் கூறியுள்ளனராம். அதிமுக கூட்டணிக்கு 35-41% வாக்குகள் கிடைத்துள்ளன. அமமுகவிற்கு 8-11% வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், மக்கள் நீதி மய்யத்திற்கு 6-9% பேரும் வாக்களித்துள்ளதாக கூறுகிறது தந்தி டிவி கருத்துக் கணிப்பு.
    நாம் தமிழருக்கு 5-8% பேர் வாக்களித்துள்ளனராம்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி தொகுதியில், அதிமுக - பாஜக கூட்டணிக்கு 40-46% பேர் வாக்களித்துள்ளார்களாம். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45% ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாக கூறுகிறது இந்த எக்ஸிட் போல். அமமுகவிற்கு 5-8 % வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7% வாக்குகளும் கிடைத்துள்ளன. நாம் தமிழருக்கு 3-6% பேர் அங்கு வாக்களித்துள்ளார்களாம்.

    கிருஷ்ணகிரி நிலவரம்

    கிருஷ்ணகிரி நிலவரம்

    கிருஷ்ணகிரி தொகுதியில், அதிமுக கூட்டணி முன்னிலைப் பெறுகிறது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு 39- 45% ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 36-42% பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு 4-10% வாக்குகள் கிடைத்துள்ளன.

    வட சென்னை களம்

    வட சென்னை களம்

    வடசென்னை தொகுதியில், திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று தந்தி டிவி எக்ஸிட் போல் கூறுகிறது. இந்த தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47% பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பாஜக கூட்டணிக்கு 34-40% ஓட்டுக்களும், அமமுகவிற்கு 6-9% ஓட்டுக்களும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 6-9% ஓட்டுக்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம். நாம் தமிழருக்கு 4-7% பேர் வாக்களித்துள்ளனர்.

    முதல்வர் சொந்த மாவட்டம்

    முதல்வர் சொந்த மாவட்டம்

    சேலம் தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளதாம். இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் என்பது கவனிக்கத்தக்கது. சேலம் தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 41-47% பேர் தெரிவித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 38-44% பேர் வாக்களித்துள்ளனராம். அமமுகவிற்கு 6-9% வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7% வாக்குகளும் கிடைக்குமாம்.

    அரக்கோணம் எப்படி

    அரக்கோணம் எப்படி

    அரக்கோணம் தொகுதியில் திமுக- அதிமுக கூட்டணிகள் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்கிறது தந்தி டிவி. அதிமுக - பாஜக கூட்டணிக்கு வாக்களித்ததாக 38-44% பேரும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 37-43% பேரும் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு 7-10% பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7% பேரும் வாக்களித்துள்ளார்களாம்.

    English summary
    Thanthi TV Exit polls says DMK and AIADMK will give tough competition in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X