டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 48 நாட்களில் விண்வெளியில் சந்திரயான் அனுபவிக்கப் போகும் அக்னி பரிட்சைகள் இவை தான்!

நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 இனி வரும் 48 நாட்கள் என்ன மாதிரியான பயணத்தை எல்லாம் மேற்கொள்ளும் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | சந்திராயன் 2 விண்கலத்துடன் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!- வீடியோ

    டெல்லி: நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 இனி வரும் 48 நாட்கள் என்ன மாதிரியான பயணத்தை எல்லாம் மேற்கொள்ளும் தெரியுமா? இதை படிங்க எல்லாம் புரியும்!

    சந்திரயான் 2 நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் இஸ்ரோ மாஸாக காலரை தூக்கிவிட்டுள்ளது. தற்போது பூமியை சுற்றிக்கொண்டு இருக்கும் சந்திரயான் 2 இன்னும் 22 நாட்களில் நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கிவிடும்.

    சந்திரயான் 2 பூமியில் இருந்து செலுத்தப்பட்டதில் இருந்து நிலவை அடையும் வரை மொத்தம் 48 நாட்கள் மிக நீண்ட பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயணத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று ஒவ்வொரு படிநிலையாக பார்க்கலாம்!

    மூன்று கருவிகள்

    மூன்று கருவிகள்

    சந்திரயான் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.

    என்ன ராக்கெட்

    என்ன ராக்கெட்

    இந்த சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இஸ்ரோ பெரிய திட்டங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பயன்படுத்தும். இது கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். கிரையோஜெனிக் எஞ்சின் ராக்கெட்டுகள் 1000 கிலோவிற்கும் அதிக எடை கொண்ட கருவிகளை எளிதாக சுமந்து செல்லும் என்பதால் மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.

    எஞ்சின்

    எஞ்சின்

    இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரிக்கப்பட்டது. இதில் இருக்கும் கிரையோஜெனிக் எஞ்சினும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இஸ்ரோ தயாரிக்கும் மற்ற ராக்கெட்டுகள் போலவே இதிலும் மூன்று அடுக்கு எரிபொருள் அமைப்பு இருக்கிறது. மூன்று அடுக்குகளாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டு விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

    மூன்று அடுக்கு

    மூன்று அடுக்கு

    இதில் முதற்கட்டம் இரண்டு ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் கொண்டது. இந்த ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் கொடுக்கும் உந்து சக்தி மூலம்தான் ராக்கெட் வானத்தை நோக்கி பறக்க தொடங்கும். இது திட காம்போசைட் (ஹைட்ராக்சில் டெர்மினேடெட் பாலி பியூட்டாடையின் ) எரிபொருளை கொண்டது. அதாவது இதுதான் ராக்கெட்டிற்கு ஸ்பார்க் பிளக் போல செயல்படும். ஆனால் கொஞ்சம் நீண்ட நேரம் செயல்பட கூடிய ராட்சச ஸ்பார்க் பிளக் என்று கூட கூறலாம். இந்த ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள்தான் ராக்கெட்டை மேலே செலுத்த முக்கிய காரணியாக இருக்கிறது.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    இதை S200 எஞ்சின்கள் என்று அழைப்பார்கள். மொத்தம் இரண்டு எஞ்சின்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஸ்டிராப் ஆன் எஞ்சினும் 205 டன் திட எரிபொருளை கொண்டது. அதற்கு அடுத்தபடியாக ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் இரண்டிற்கும் நடுவே கோர் திரவ எஞ்சின்கள் இருக்கும். L110 என்ற இரண்டு கோர் திரவ எஞ்சின்கள் இதில் அடுத்தடுத்து இருக்கும். ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் நின்ற பின் இந்த L110 எஞ்சின்கள் செயல்பட தொடங்கும்.

    மூன்றாவது எஞ்சின்

    மூன்றாவது எஞ்சின்

    இந்த திரவ L110 எஞ்சின்களும் கலவையான எரிபொருட்கள் (டைமெத்திலீன்ஹைட்ராக்சின் - நைட்ரஜன் டெட்ராக்ஸைட்) மூலம் இயங்க கூடியது ஆகும். அதற்கு பின் கிரையோஜெனிக் எஞ்சின்கள் செயல்படும். இது அனைத்தும் சேர்த்து மொத்தம் 4 டன் எடையை பூமியின் வெளி வட்டப்பாதை வரை கொண்டு செல்லும். அதேபோல் 10 டன் எடை கொண்ட கருவிகளை பூமியின் உள் வட்டப்பாதை வரை கொண்டு செல்லும். இதை வைத்துதான் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.

    என்ன எஞ்சின்

    என்ன எஞ்சின்

    ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இதன் மூலமே சந்திரயான் 2 செலுத்தப்பட்டது. இந்த கிரையோஜெனிக் எஞ்சின் தொடக்க காலத்தில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக இருந்தது. இதன் தொழில்நுட்பத்தை ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு தர மறுத்தது.
    திரவ ஆக்சிஜனை -183 °C [90 K] மற்றும் திரவ ஹைட்ரஜனை -253 °C [20 K] வெப்பநிலை வரை கொண்டு சென்று அதை எரிபொருளாக பயன்படுத்தி இந்த எஞ்சின் இயக்கப்படும்.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    ஆனால் ராக்கெட் செல்லும் போது இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்துவது கடினம். இந்த சிக்கலை கடந்து வர இஸ்ரோ அதிக கஷ்டப்பட்டது. ஆனால் இதை கடந்த சில வருடங்களுக்கு முன் இஸ்ரோ சுயமாக உருவாக்கியது. தற்போது இது அதிக திறனுடன் மிக சரியாக கட்சிதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    எப்போது

    எப்போது

    நேற்று சரியாக மதியம் 2.49 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின் பூமியின் 170 கிமீ வட்டப்பாதையை அடைய சந்திரயான் 2 மொத்தம் 16 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. கவுண்டவுன் முடிந்த அடுத்த நொடி சரியாக ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் நெருப்பை கக்கியது. இந்த S200 ஸ்டிராப் ஆன் எஞ்சின்கள் சரியாக 140 நொடிகள் இயங்கியது.

    வெளியேறும்

    வெளியேறும்

    140 நொடிகள் இது ராக்கெட்டை விண்ணை நோக்கி உந்தி சென்றது. இது இயங்கிக் கொண்டு இருக்கும் போதே 114வது நொடியில் கோர் திரவ எஞ்சின்கள் L110 செயல்பட தயார் ஆனது. அதன்பின் S200 140 நொடியில் கழற்றிவிடப்பட்ட பின் L110 எஞ்சின் நெருப்பை கக்க தொடங்கியது. இது மேற்கொண்டு ராக்கெட்டை மேலே உந்தி சென்றது. இதுவும் சரியாக 140 நொடி நெருக்கடி வெளியிட்டு பின் கழன்று சென்றது.

    சூப்பர் விஷயம்

    சூப்பர் விஷயம்

    சரியாக ராக்கெட் ஏவப்பட்டு 240 நொடியில் இரண்டு எஞ்சின்களும் ராக்கெட்டில் இருந்து கழற்றி விடப்பட்டது. அப்போது ராக்கெட்டின் பே - லோடில் (விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இருக்கும் இடம்) உள்ள மூடி போன்ற சாதனம் கழற்றி விடப்படும். கிரையோஜெனிக் எஞ்சின் செயல்பட வசதியாக இப்படி எடை குறைக்கப்படும். அதன்பின்தான் மிக முக்கியமான கிரையோஜெனிக் என்ஜின் செயல்பட தொடங்கும்.

    கிரையோஜெனிக் என்ஜின் எப்படி

    கிரையோஜெனிக் என்ஜின் எப்படி

    மீதம் இருக்கும் நிமிடங்களுக்கு கிரையோஜெனிக் என்ஜின் செயல்பட்டது. சரியாக 170 கிமீ பூமி சுற்றுப்பாதையை அடையும் வரை கிரையோஜெனிக் என்ஜின் செயல்பட்டது. அதன்பின் சரியாக 16வது நிமிடத்தில் கிரையோஜெனிக் என்ஜின் ராக்கெட்டில் இருந்து கழன்று சென்றது. ஆம் 16 வது நொடியில் சந்திரயான் 2 மாடல் மொத்தமாக ராக்கெட்டில் இருந்து கழன்று சென்றது.

    அப்போதே இருக்கும்

    அப்போதே இருக்கும்

    சரியாக அந்த நொடியிலேயே சந்திரயான் 2 செயல்பட தொடங்கியது. சந்திரயான் 2 தனது சோலார் பேனல்களை திறந்துவிட்டு பூமியை 170 கிமீ தூரத்தில் இருந்து சுற்ற தொடங்கியது. இனி இது பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பூமியை இப்படி சந்திரயான் 2 சுற்றும் போது எரிபொருள், எஞ்சின் எதுவும் பயன்படுத்தப்படாது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இந்த செயல்பாடு முழுக்க முழுக்க இயற்பியலை நம்பி மட்டுமே நடக்கிறது. பூமியை எதிர் கடிகார திசையில் சந்திரயான் 2 சுற்றும். நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 சுற்றுவதன் மூலம் அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். இதனால் நீள்வட்ட பாதையில் சுற்றி சுற்றி பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 நகர்ந்து தூரமாக செல்லும். இப்படியாக பூமியைவிட்டு 23 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 2 விலகி செல்லும்.

    எல்லாம் இயற்பியல்

    எல்லாம் இயற்பியல்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த செயல்பாடு நடக்கும் போது கொஞ்சம் கூட இதற்கு எரிபொருள் பயன்படுத்தப்படாது. பூமியை நீள்வட்ட பாதையில் எதிர்திசையில் சுற்றுவதன் மூலம் சந்திரயான் 2 வேகம் அதிகரிக்க தொடங்கும். 23ம் நாள் அன்று சரியாக பூமியில் இருந்து சந்திரயான் 2 ஆனது 45000 கிமீ தூரத்திற்கு சென்று இருக்கும். இதுதான் மிக முக்கியமான கட்டமாகும்.

    எங்கு செல்லும்

    எங்கு செல்லும்

    சரியாக 45000 கிமீ தூரத்தில் சந்திரயான் 2இருக்கும் போது பூமியில் இஸ்ரோவில் இருந்து அதற்கு ஒரு கட்டளை அனுப்பப்படும். இது சந்திரயான் 2ல் உள்ள எஞ்சின் ஒன்றை ஆன் செய்யும். 23 நாட்கள் மிகவும் குளிரில் உறைந்து இருக்கும் எஞ்சின் சரியாக ஆன் ஆக வேண்டும். இதுதான் இந்த திட்டத்தில் சவாலான விஷயம். ஆனால் சந்திரயான் 1 ஏற்கனவே இப்படித்தான் சென்றது என்பதால் சந்திரயான் 2ல் உள்ள எஞ்சினும் சரியாக 23ம் தேதி ஆன் ஆகும்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இப்படி இயற்பியலை பயன்படுத்த இஸ்ரோவிற்கு காரணம் இல்லாமல் இல்லை. நாசா, ரஷ்யா அனுப்பும் ராக்கெட்டுகள் எல்லாம் நேராக நிலவை நோக்கி செல்லும். ஆனால் சந்திரயான் 2 மட்டும்தான் பூமியை சுற்றி பின் வேகம் எடுத்து செல்கிறது. இதற்கு காரணம் எரிபொருள் தேவை குறையும். அதேபோல் செலவு மிச்சம். இந்த மொத்த சந்திராயன் 2 திட்டத்தை முடிக்க ஜிஎஸ்எல்வி ராக்கெட்டையும் சேர்த்து 940 கோடி ரூபாய்தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன் ஆகும்

    ஆன் ஆகும்

    சரியாக 23வது நாளில் சந்திரயான் 2ல் எஞ்சின் ஆன் செய்யப்பட்ட பின் அது நிலவை நோக்கி நகர தொடங்கும்.பூமியை எப்படி சந்திரயான் 2 எதிர் கடிகார திசையில் சுற்றியதோ அதேபோல் நிலவை சந்திரயான் 2 கடிகார திசையில் சுற்றும். அப்போதுதான் நிலவிற்கு அருகில் சென்று அதன் வேகத்தை குறைக்க முடியும். அதேபோல் சரியாக நிலவிற்கு அருகில் சென்று தென் துருவத்தில் இறங்க முடியும்.

    எப்படி சுற்றும்

    எப்படி சுற்றும்

    நிலவை நெருங்கியவுடன் சந்திரயான் 2 கடிகார திசையில் நீள்வட்டப்பாதையில் சுற்றும். இதன் மூலம் நிலவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சந்திரயான் 2 செல்லும். இதிலும் எஞ்சின் எதுவும் பயன்படுத்தப்படாது. நிலவின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, நீள்வட்ட பாதையில் சுற்றுவதால் சந்திரயான் 2 நிலவிற்கு அருகில் கொஞ்சம் கொஞ்சமாக சென்று வட்டப்பாதையை அடையும். இதுதான் சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் களம் இறங்க வேண்டிய நேரம் ஆகும்.

    எப்படி அடையும்

    எப்படி அடையும்

    சரியாக செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். அப்போது சந்திரயானில் இருந்து ஆர்பிட்டர் எனப்படும் சாட்டிலைட் கழற்றி விடப்படும். இதற்கு பூமியில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்படும். கழற்றிவிடப்பட்ட ஆர்பிட்டார் நிலவை அடுத்த ஒரு வருடத்திற்கு சாட்டிலைட் போல சுற்றி தகவல்களை அனுப்பும். ஆனால் அதற்கு பின்தான் முக்கியமான சிக்கல் இருக்கிறது.

    எதிர் எஞ்சின்

    எதிர் எஞ்சின்

    சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.

    எப்படி இறங்கும்

    எப்படி இறங்கும்

    அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். லேண்டரில் இருக்கும் ஏஐ சென்சார்கள் மூலம் நிலவில் தென் பகுதியில் எங்கே இறங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படும். இந்த ஏஐ சென்சார் முழுக்க முழுக்க சுயமாக இந்த முடிவை எடுக்கும் திறன் கொண்டது. இது முடிவெடுத்த பின் விக்ரம் கீழே இறங்கும். இதில் பாராசூட் இருக்காது. அதனால் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்த 1 கிமீ/ நேரத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக நிலவில் இறங்கும்.

    என்ன நடக்கும் அடுத்து

    என்ன நடக்கும் அடுத்து

    செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும். பிரக்யான் ரோவர் வெளியே வந்தவுடன் சூரியனை நோக்கி தனது சோலார் பேனல்களை திறக்கும். இதன் மூலம்தான் இந்திய நேரப்படி 14 நாட்கள், அதாவது செப்டம்பர் 21 அல்லது 22 வரை பிரக்யான் ரோவர் இயங்கும்.

    எத்தனை நாட்கள்

    எத்தனை நாட்கள்

    இந்த இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும். விக்ரம் லேண்டரால் வேறு எங்கும் நகர்ந்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விக்ரம் உள்ளே இருக்கும் ரோவர் ரோபோவான பிரக்யான் 500 மீட்டர் வரை நகர்ந்து செல்ல கூடிய திறன் கொண்டது.

    பிரக்யான்

    பிரக்யான்

    பிரக்யான் என்பது ஊர்ந்து செல்ல கூடிய ரோவர் வகை ரோபோட் ஆகும். இது வெறும் 27 கிலோதான் கொண்டது. இதில் நிறைய ஆராய்ச்சி கருவிகள் இருக்கும். நிமிடத்திற்கு 1 செமீ தூரம் இது நகர கூடியது. மொத்தம் 14 நாட்கள் மட்டுமே நிலவில் இது ஆராய்ச்சி செய்யும். ஆம் வெறும் 14 நாட்களில் இது மொத்தமாக தனது ஆராய்ச்சிகளை முடித்துவிடும். அதன்பின் இதன் வாழ்நாள் முடிந்துவிடும்.

    என்னவெல்லாம் செய்யும்

    என்னவெல்லாம் செய்யும்

    சந்திரயான் 2 திட்டத்தின் மெயின் ஹீரோ யார் என்றால் அது பிரக்யான்தான். பிரக்யான் செய்யும் ஆராய்ச்சி முடிவுகளை வைத்துதான் நிலவில் இந்தியா தனது ஆராய்ச்சிகளை தொடரும். சரியாக 14 நாட்களில் பிரக்யான் தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பணிகளையும் மொத்தமாக முடித்துவிட்டு செயலிழக்கும். சமயங்களில் சோலார் சக்தி அதிகம் இருந்தால் கூடுதலாக கூட வேலை செய்யும்.

    எப்போது முடிவுகள்

    விக்ரம் லேண்டர் 1400 கிலோ எடை கொண்டது. பிரக்யான் தனது ஆராய்ச்சி சிக்னல்களை விக்ரமிற்கு அனுப்பும். அதன்பின் விக்ரம் பூமிக்கு முடிவுகளை அனுப்பும். விக்ரமின் ஆயுட்காலமும் 14 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் செப்டம்பர் மாத இறுதியில் நிலவில் இந்தியா புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்த வாய்ப்புள்ளது.. அதுவரை இஸ்ரோவிற்கு நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நகர்ந்து செல்லும்!

    English summary
    The Alpha and Omega of Chandrayaan-2: All you need to know about is here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X