டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ram Janma Bhoomi ; the birth place of Lord Rama : Hindu Side Argue Over

    டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, தலைமை நீதிபதி தலைமையிலான, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சமரச குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இருப்பினும், அறிக்கையில் என்ன அம்சங்கள் இருக்கிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    The Ayodhya land dispute settlement report filed by the mediation panel

    முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா, ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. ஆனால், இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

    ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல்! எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதிராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல்! எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி

    இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் அயோத்தி பிரச்சினை குறித்த இறுதி விசாரணை ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இதனிடையே, முஸ்லீம் தரப்பு சார்பில், வழக்கறிஞர் இக்பால் அன்சாரியின் வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், சுன்னி வக்ஃப் வாரியம் நிலத்தின் உரிமைகோரலை விட்டுக்கொடுப்பது பற்றி பேசவில்லை, இவை அனைத்தும் வதந்திகள்.

    நான், இக்பால் அன்சாரி ஹாஷிம் அன்சாரி சார்பாக வாதங்களை முன்வைத்து வருகிறேன். வாரியம் பற்றி நடந்து வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் இப்போது இக்பால் அன்சாரி ஹாஷிம் அன்சாரி சார்பாக வாதங்களை முன்வைத்து வருகிறேன். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Ayodhya land dispute settlement report has been filed in the Supreme Court by the mediation panel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X