• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நான் இப்போதுள்ள அனைத்துக்கும் ஆரம்பம்".. வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் மோடி

|
  Modi Interview: ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்துள்ள பேட்டி- வீடியோ

  டெல்லி: 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே', தங்கள் இதமானத் தன்மையாலும், நிஜவாழ்க்கை தைரியத்தாலும், பெரிய ஜாம்பவான்களையே நிராயுதபாணியாக்கிவிடுவார்கள் என்று அறியப்படுபவர்கள். அவர்கள் தங்களின் முதல் பெரிய நேர்காணலை பார்க்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல, நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.

  சிறுவனாக இருந்த காலகட்டத்தின் மோடியின் வாழ்க்கையை, இந்த நேர்காணல் பிரதிபலிக்கிறது. அவரது வாழ்க்கையில் நடந்தவற்றை நம்மிடம் கூறி மகிழ்விக்கிறார் மோடி. "நான் இப்போதுள்ள அனைத்துக்கும் ஆரம்பம்" என்று தனது பழைய காலங்களை அவர் விளக்குகிறார்.

  மோடி தனது வரலாற்றை, பிரியமான ஒரு படத்தை வரைந்து ஆரம்பிக்கிறார். அது அவரது தாயாரின் உருவப் படம். தொடுவதன் மூலம் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட அவரின் தாயாரிடம் சிகிச்சை பெற வீட்டுக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் நிற்பார்கள். மோடி இதுபற்றி இவ்வாறு கூறுகிறார், "கல்வி கற்கும் ஒரு நல்வாய்ப்பை என் தாயார் பெறவில்லை, ஆனால், கடவுள் கருணையானவர் & நோய்களை தீர்த்து வைக்க, எனது தாயிடம் சிறப்பான வழி ஒன்று இருந்தது. தாய்மார்கள் பலரும் எங்கள் வீட்டுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். ஏனெனில் எனது தாயாரின் 'தொடு சிகிச்சை' அப்படி விஷேசமானது" என்றார்.

  The Beginning of Everything That I Am Today” PM Modi Narrates His Lifes Journey

  பிரதமர் மோடி, தனது தாய்க்கு முன்னுரிமை அளித்ததன் மூலம், தாய் மீதான அவரது பயபக்தியை பார்க்க முடிகிறது. அவரது பாசத்தை தாய் குறித்து அவர் நினைத்துக்கொண்டிருக்கும் பிம்பம் மூலமாக நம்மால் உணர முடிகிறது. தான் நேர்மையானவராகவும், ஒழுக்கமானவராகவும் பணிபுரிவதிலுமே, தனது தாய் அக்கறை காட்டினார். அந்த இரண்டு குணங்களை வாழ்க்கையின் மூலதனமாக மாற்றினார் என்கிறார் மோடி.

  தாய் தனது மகனுக்கு சொன்ன ஒரே முக்கிய அறிவுரை, எப்போதுமே லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட கூடாது என்பதுதான். 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே'க்காக அதை மோடி, இவ்வாறு நினைவு கூறுகிறார் பாருங்கள்.

  "' 'டேக் பாய், எனக்கு நீ என்ன செய்கிறாய் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், நீ எப்போதுமே லஞ்சம் வாங்க மாட்டாய் என எனக்கு சத்தியம் செய்.. எப்போதுமே அந்த பாவத்தை செய்யாதே'. இந்த வார்த்தைகள்தான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏன் என்று உங்களுக்கு சொல்கிறேன். எந்த ஒரு பொருள் சார்ந்த சொகுசு வாழ்க்கையும், அறியாமல், தனது மொத்த வாழ்க்கையையும் ஏழ்மையிலேயே வாழ்ந்த ஒரு பெண்மணி, என்னிடம் சொன்னார் லஞ்சம் வாங்காதே என்று" இப்படி கூறி நெகிழ்கிறார் மோடி.

  The Beginning of Everything That I Am Today” PM Modi Narrates His Lifes Journey

  குஜராத் முதல்வராக 13 வருடங்களாக பதவி வகித்தவர் மோடி. முதல்வர் பதவி மோடிக்கு வழங்கப்படுவதாக, முதல் முறையாக அறிவிப்பு வெளியானபோது, நடந்தவற்றை மோடி நினைத்துப் பார்க்கிறார். மோடி இதை, தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக கருதினாலும், அவரது தாயாருக்கோ, தனது மகன் அருகாமையிலேயே பணியாற்றப் போகிறான் என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.

  முதல்வராக பதவியேற்கும் முன்பாக, அகமதாபாத்தில் தாயாரை சந்திக்கப்போன தருணத்தை மோடி நினைவு கூர்கிறார். "அதற்குள்ளாகவே, நான் முதல்வராகப்போவதை தாயார் அறிந்து வைத்திருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமானால், அந்த பதவி குறித்து அவருக்கு தெரிந்திருக்காது என்றுதான், நினைத்திருந்தேன். ஆனால் வீட்டுக்கு சென்றபோது, அங்கே திருவிழா சூழ்நிலை நிலவிவியது, கொண்டாட்டம் துவங்கியிருந்தது. ஆனால், எனது தாய் என்னை பார்த்ததும், கட்டியணைத்தார். "குஜராத்துக்கே நீ திரும்பி வந்துவிட்டாய் என்பதுதான் இதில் நல்ல ஒரு விஷயம்" என்று என்னிடம் கூறினார். இதுதான் தாயின் இயல்பு. என்னதான் சுற்றி நடந்தாலும், குழந்தைகளோடு இருக்கத்தான் தாய் விரும்புவார்" என்று சொல்கிறார் மோடி.

  8 பேர் கொண்ட தனது, குடும்ப உறுப்பினர்கள் வசித்த 40*12 அடி அளவே கொண்ட எளிமையான, வீடு பற்றி மோடி விவரிக்கிறார். முதலில் மோடிதான் டீக்கடையை திறப்பார். பிறகுதான் பள்ளிக்கு கிளம்புவார். தனது தந்தையின் டீ கடை வேலையில் உதவி செய்ததை மகிழ்ச்சியாக உணர்ந்ததாக கூறுகிறார் மோடி. நாட்டின் பல பகுதி மக்களை சந்திக்கவும், அவர்கள் கதைகளை அறியவும் இந்த பணி அவருக்கு உதவியதாம்.

  மோடி சிறுவனாக இருந்தபோது பெரிய கனவுகளுடன் வாழ்ந்ததையும், தன்மீதான நம்பிக்கையை வளர்த்தெடுத்ததையும், விவரிக்கிறார். ஆடம்பரத்துடன் நிறைந்த ஒரு மழுப்பலான கனவை துரத்துவது, வீண் என்பதை அவரது வரலாறு விவரிக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து சிறந்ததை உருவாக்குவதற்கும், அபிலாஷைகளை உணர்ந்து செயல்படுவதற்கும் அவர் முயற்சி செய்தார்.

  "என்னிடம் உங்களின் கஷ்டங்கள் எவை என்று கேட்டால், எதுவுமே இல்லை என்றுதான் நான் சொல்வேன். நான் ஒன்றுமே இல்லாததில் இருந்து வந்துள்ளேன். எந்த சொகுசையும் அறிந்ததில்லை & மேம்பட்ட ஒரு வாழ்க்கையை நான் பார்த்ததில்லை, எனவே எனது சிறிய உலகில் நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன்" என்கிறார் மோடி.

  மிக இளம் வயதில், சூழ்நிலைகளில், குறைபாடுகள் இருந்த போதிலும், நல்ல தொண்டு வாழ்க்கைக்கான அடிப்படைக் கொள்கைகள் மோடிக்கு நன்கு தெரியும். 8 வயதாக இருந்தபோது மோடி முதல்முறையாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்றார் மற்றும், குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்களுடன் இணைந்து உதவியபோது அவருக்கு வயது 9 மட்டுமே. அந்த வயதிலேயே ஒரு தொண்டாற்றும் ஊக்கத்தோடு காணப்பட்டார்.

  மோடியின் குடும்பம் வளர்ந்துகொண்டிருக்கும்போது, ​​பொருளாதாரம் சார்ந்த வசதிகளை இழந்தது. ஆனாலும், வாழ்க்கையின் இருப்பை உணருவதற்கு மோடியை இந்த இடர்பாடுகளால் தடுக்க முடியவில்லை. இஸ்திரி செய்ய உபகரணம் இல்லாத போது, சூடான நிலக்கரியை பயன்படுத்தி, தனது ஆடைகளை இஸ்திரி செய்து கொண்டதை மோடி இப்போதும் நினைவு கூர்கிறார்.

  வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை செய்வோம் என மோடிக்கு இளமையிலேயே தெரிந்திருந்ததா? பிரதமர் மோடியின் கூற்றுப்படி, 8 வயது சிறுவனாக இருந்தபோது, இந்த நாட்டை ஆளக்கூடியவராக வளர்ச்சியடைவோம் என்று மோடிக்கு தெரியாது. மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், "இல்லை.. இதை நினைத்து கூட பார்க்கவே முடியாத தூரத்தில்தான் நான் இருந்தேன்" என்கிறார். ஆனால், அவர், "பம்பாய்" பற்றிதான் கனவு கண்டு கொண்டிருந்தார்.

  ஒரு குழந்தையாக, தனது ஆர்வத்தை இலக்கியம் மூலம் தணிக்க, நூலகத்தில் பல மணிநேரத்தை செலவிடுவேன், எனவும் 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே'களிடம் கூறினார்.

  நாட்டின் மிகச்சிறந்த தலைவர் நரேந்திர மோடி குறித்து அறியப்படாத அறிமுகம் நமக்கு பல வருடங்களாக கிடைத்து வருகிறது. ஹூமன்ஸ் ஆப் பாம்பே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள உதவி செய்துள்ளது. தனது தாயை உச்சபட்ச மரியாதையுடன் வைத்துக்கொண்டுள்ள ஒரு மனிதர், எப்படி தனது வாழ்க்கையின் கஷ்டங்களை வென்று மேலே உயர்ந்து வந்தார் என்பதை அறிந்து கொண்டோம்.

  மோடியும், இமயமலைப் பயணங்களும்.. தன்னைத் தானே அறிந்து கொண்ட தருணங்களும்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Humans of Bombay known to disarm even the harshest of cynics with real-life gut-wrenching, heartwarming, intrepid stories of everyday individuals, have roped in their first big interview with none other than the Prime Minister of our nation, Narendra Modi. The interview provides an insight into Modi's life as a young boy. Seated in a chair, he regaled us with stories from his life, recounting the days that he describes as "the beginning of everything that he is today."

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more